பக்கம்:மதன கல்யாணி-3.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 15 உடனே மதனகோபாலன், தான் கடற்கரைக்குப் போய், கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வருவதாக மோகனாங்கியிடத்தில் சொல்லி அவளது அனுமதி பெற்றுக்கொண்டு மெல்ல நடந்து அந்த பங்களாவின் உத்தியான வனத்தைக் கடந்து வெளியிலிருந்த ராஜபாட்டைக்கு வந்து சேர்ந்தான். வந்தவன் எதிரிலிருந்த கடற் கரையின் கண்கொள்ளா வனப்பையும், ராஜபாட்டையின் இரு புறங்களிலும் நெடுந்துரம் வரையில் காணப்பட்ட வனமாளிகை களினது சிங்காரத்தையும் கண்டு பூரித்துப் புளகாங்கிதம் அடைந்த வனாய், தண்னைச் சுற்றிலுமிருந்த உன்னத சிருஷ்டியில் தனது கவனம் முழுதையும் செலுத்தி மெய்ம்மறந்து அவற்றிலேயே லயித்துப் போய்ச் சிறிது நேரம் நின்றபின், மோகனாஸ்திரம் போல மனதைக் கவர்ந்த அவ்வற்புதக் காட்சியால் வசீகரிக்கப்பட்டவனாய் ராஜபாட்டையோடு மெல்ல நடக்கத் தொடங்கினான். அந்தப் பாட்டையின் மேல் நெடுந்துாரம் இடைவெளி விட்டு பங்களக்கள் அமைந்திருந்தமையாலும், அவற்றினுள் வசித்தோர் யாவரும் உட்புறத்திலேயே இருந்தமையாலும், அந்தப் பாட்டையின் மீது மனிதரது நடமாட்டம் சுத்தமாக இல்லாதிருந்தது. ஆனால் அப்போதைக்கப்போது இரண்டொரு மோட்டார் வண்டிகள் மாத்திரம் வந்து போய்க் கொண்டிருந்தது. மனிதர்கள் நடப்பதற் காக மணலோரமாகக் கட்டப்பட்டிருந்த குறட்டின் வழியாக மதன கோபாலன் நடந்து இடையிடையே வந்த ஒவ்வொரு பங்களவின் உட்புறத்தழகையும் உன்னத அமைப்பையும் அதன் வெளியில் பலகைகளிலோ தகடுகளிலோ காணப்பட்ட அவற்றில் வசிப்போரது பெயர்களையும் கவனித்துக் கொண்டே சென்றான். அவ்வாறு சென்றது மதனகோபாலனுக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் உண்டாக்கிக் கொண்டிருந்தது. அப்போது அவனுக்கெதிரில், கடற்கரையை அடுத்த சாரியில், ஒரு தென்னஞ் சோலையும், அதன் பக்கத்தில் ஒர் அழகிய பங்களாவும் இருந்தன. அந்தத் தென்னஞ் சோலையைச் சுற்றி நாற்புறங்களிலும் மதில் இருந்தது, அந்தத் தென்னஞ் சோலை, அதற்கப்பாலிருந்த பங்களாவிற்கே சேர்ந்ததாகக் காணப்பட்டது. அவன் அந்த வழியில் அதுகாறும் குறுக்கிட்ட அத்தனை பங்களாக்களையும் பார்த்ததில் அப்போது தென்னஞ் சோலைக்கருகில் காணப்பட்ட ш.а..III-2