வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 187
மில்லை. நாங்கள் இந்தக் குற்றவாளிகளின் போஷகாகளால் நியமிக்கப்பட்டோம். அவர்கள் ஒரு விஷயம் சொல்லுகிறார்கள; அது எங்களுக்கு நியாயமாகவே தெரிகிறது. இறந்து போன மாரமங்கலம் பெரிய ஜெமீந்தார் எழுதிவைத்துள்ள உயிலின்படி போஷகர்கள் உண்மையான மைனருக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்; இது வரையில் இந்த முதல் குற்றவாளி தான் உண்மையான மைனர் என்று நம்பி, அவரைத் தப்பவைக்கும் பொருட்டு ஏராளமான பணத்தை வாரி இறைத்தார்கள்; அவர் உண்மையான மைனரல்ல என ருஜூவாகி இருக்கிறதென்று அவர்கள் அபிப்பிரா யப் படுவதால், இனிமேல் அவர் பொருட்டு பணம் செலவழிக்கத் தங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று போஷகர்கள் சொல்லி விட்டார்கள்; ஆகையால் எங்களுக்குக் கூலியுமில்லை; வேலையுமில்லை. இந்த வழக்கில் எங்களுக்கு இனி எவ்விதச் சம்பந்தமுமில்லை. எனக்கு வேறொரு ஜட்ஜியின் கச்சேரியில் அவசரமான ஜோலி இருப்பதால், நான் உத்தரவு பெற்றுக் கொள்ளுகிறேன்" என்று கூறி ஜட்ஜி துரைக்கு வந்தனம் செய்து விட்டு, அந்த மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
அந்த மகா விநோத சம்பவத்தைக் கண்ட யாவரும் முன்னிலும் பன்மடங்கு அதிக வியப்பும் திகைப்பும் அடைந்து அந்த அபூர்வமான வழக்கு எப்படித்தான் முடியுமோ என்று பேராவல் கொண்டு நின்றனர்.
உடனே ஜட்ஜி துரை மைனரை நோக்கி, "ஐயா! இப்போது சாட்சிகள் யாவரும் கொடுத்த வாக்குமூலங்களைக் கேட்டுக் கொண்டிருந்தீரே, நீர் இந்தக் கொலைக் குற்றத்தைச் செய்ததுண்டா இல்லையா?" என்றார்.
அப்போது மைனரது மனநிலைமை இன்னவிதமாகத் தான் இருக்கிறதென்பதை எழுதுவது மகா அசாத்தியமான காரியம். தான் கருப்பாயியின் மகன் என்று சொல்லப்பட்டதை அவள் ஆரம்பத்தில் பொருட்படுத்தாமல் இருந்தான் ஆகையால், தான் அவளைக் கொலை நியாயமில்லை என்று நம்பி ஜட்ஜி தன்னை விட்டுவிடுவார்கள் என்று மைனர் உறுதியாக நம்பி இருந்தான்.
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/190
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
