பக்கம்:மதன கல்யாணி-3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 மதன கல்யாணி கருப்பாயியின் வாக்குமூலத்தின் பிறகு, தான் உண்மையான மைனரல்ல என்ற நிச்சயம் அவனது மனதிலேயே உண்டாகி விட்டது. டாக்டர் கேசவலு நாயுடு, மைசூர் சின்னையா நாயுடு, மச்சத்தைப் பரீட்சித்த சர்ஜன் முதலியோர்களது வாக்குமூலங் களைக் கேட்ட பிறகு எல்லா விஷயங்களும் உண்மை என்பது அவனுக்கே தெளிவாகிவிட்டது. கடைசியாக பாரிஸ்டர் குரோட் டன் துரை பேசிவிட்டுப் போன பிறகு அவனது நாடி முற்றிலும் வீழ்ந்து போய்விட்டது. அந்த துரை முடிவு வரையில் இருந்து சாட்சிகள் எல்லோரையும் குறுக்கு விசாரணை செய்து, வாதாடி இருந்தாலாகிலும் தான் தப்பிப் பிழைக்கலாம் என்ற சொற்ப நம்பிக்கையாகிலும் இருக்கும். இப்போது தான் தப்புவதும் சந்தேகமாகத் தோன்றியது. தப்பி வந்தாலும், தன்னை மைனர் என்று தனது போஷகர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதும் நிச்சயமாகத் தெரிந்தது. ஆகையால் தான் இனி என்ன செயவ தென்பதைப் பற்றி அவனது மனம் பதறித் தவித்தது அதுகாறும் அபாரமான செல்வத்திலும் செல்வாக்கிலும் இருந்து சுகமநுபவித்து, எல்லோராலும் வணங்கப்பட்டிருந்த தான் கொலைகாரன் என்றும் அம்பட்டச்சிக்கும் கொறவனுக்கும் பிறந்த இருபிறப்பு ஜாதியான் எனறும் பெயரெடுத்துப் பரம தரித்திரனாய், உலகத்தில் இருப் பதைவிட, உயிரை விட்டுவிடுவதே நல்லதென அவனுக்குத் தோன்றியது. அவன் தான் செய்த தவறுகளை எல்லாம் அந்தச் சமயத்தில் மனதார உணர்ந்தான்; தனது சொந்தத் தாயையே தான் கொன்றுவிட்டதைப் பற்றி அவனது மனம் வருந்தியது. அவனது மனம் புண்பட்டு இரத்தம் சிந்தியது. கேவலம் கீழ்ச்சாதியில் பிறந்த தன்னை, ஐசுவரியலக்ஷமிை மகா உன்னதமான பதவியில் வைக்க, அதை வகித்துக்கொள்ள மாட்டாமல், தான் தனது அதம குணங் களினால் கேவலம் இழிந்த நடத்தைகளை மேற்கொண்டு தானே தன்னைத் தனது பழைய நிலைமைக்குக் கொண்டு வந்ததன்றி, தனது உயிருக்கே சேதம் வரக்கூடிய மகாபயங்கரமான ஸ்திதிக்குத் தான் வந்துவிட்டதை நினைத்து நினைத்து அவன் கரைகடந்த துயரமும் வேதனையும் அடைந்து தத்தளித்து இரண்டொரு நிமிஷ நேரம் யோசித்தான். தனது தாயைத் தான் கொன்ற குற்றமே தன்னை அடித்துவிட்டதென்ற எண்ணம் தோன்றியது. இனிதான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/191&oldid=853329" இலிருந்து மீள்விக்கப்பட்டது