பக்கம்:மதன கல்யாணி-3.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


190 மதன கல்யாணி பாலாம்பாள், "இந்த மைனர் தான் எனக்கு சாட்சி என்றாள். உடனே மைனர் ஜட்ஜியை நோக்கி, "ஆம், இவளுக்கு நான் தான் சாட்சி இவளும் என்னோடுகூட இருந்து என்னுடைய தாயை அடித்துச் சித்திரவதை செய்தாள். நாங்கள் இருவரும் சேர்ந்து தான் அவளைக் கட்டி, தூக்கிக் கொண்டு போய் சமுத்திரத் தில் போட்டோம்" என்றான். அதைக் கேட்ட ஜட்ஜியும் மற்றவர்களும் இரக்கமாக நகைத்தனர். உடனே ஜட்ஜி மறுபடியும் பாலாம்பாளை நோக்கி, "பெண்ணே! உனக்கு இவ்வளவு அநுகூலமாக வாக்குமூலம் கொடுக்கும் இந்த மனிதரையா நீ சாட்சியாகக் கோரப் போகிறாய்? இவரைத் தவிர வேறே சாட்சிகள் இல்லையா" என்றார். பாலாம்பாள், "வேறே சாட்சிகளில்லை. நான் தான் சாட்சி என்றாள். அவ்வளவோடு அநத மகா புதுமையான வழக்கின் விசாரணை முடிவு பெற்றது. உடனே சர்க்கார் வக்கீல் எழுந்து நின்று பாரிஸ்டர் குரோட்டன் துரை குறுக்கு விசாரணை செய்த சில சாட்சிகளை எல்லாம் ஒருவர் பின்னொருவராக வரவழைத்து புனர்விசாரணை செய்த பிறகு, மிகவும் ஆடம்பரமாக வாதாடித் தமது கட்சியின் சாட்சிகள் ருஜூப்படுத்திய விஷயங்களை எல்லாம் எடுத்துக் காட்டி எல்லா அம்சங்களைப் பற்றியும் விஸ்தாரமாக விரித்துப் பேசி முடித்தார். அவரது வாதத்தில் சாட்சிகள் சொன்ன விஷயங்களை எல்லாம் திரும்பவும் சொல்ல வேண்டி வருமாதலாலும், ஜட்ஜியின் தீர்மானத்திலும் எல்லா விஷயங் களும் வருகின்றனவாதலாலும், அவரது வாதத்தை எல்லாம் அப்படியே சொல்வது மிகையாதலன்றி வாசகர்களுக்கும் துன்பகரமாக இருக்குமென எண்ணி, அதை விவரிக்காமல் விடுகிறோம்; சர்க்கார் வக்கீல் தமது வாதத்தை முடித்துக் கீழே உட்கார்ந்தவுடன், ஜட்ஜி ஜூரிமார்களை நோக்கி, "உங்களுடைய அபிப்பிராயமென்ன? கைதிகள் குற்றவாளிகளா அல்லவா?" என்றாா. அவர்கள் தங்களுக்குள் அரை நாழிகை நேரம் வரையில் யோசனை செய்து, "கைதிகள் குற்றவாளிகளே" என்று கூறினர். உடனே ஜட்ஜி யோசனை செய்து தமது தீர்மானத்தை எழுதி முடித்தார். அதன் சாரம்சம் அடியில் வருமாறு: