பக்கம்:மதன கல்யாணி-3.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 191 நாம் இதுவரையில் எத்தனையோ வேடிக்கையான வழக்கு களைப் பரிசீலனை செய்திருக்கிறோம் ஆனாலும், அவைகள் எல்லாவற்றிலும் இது மிகவும் அபூர்வமானதாக இருக்கிறது; இந்த விசாரணையில் எதிாபாராத புதிய விஷயங்கள் எல்லாம் வெளியா யின. முதற் குற்றவாளியின் கட்சியிலிருந்து மகா திறமை யோடு வாதித்த பாரிஸ்டர் குரோடடன் துரை இந்த விசாரணையின் முடிவு வரையில் இருந்திருப்பாரானால், அவரது விசேஷ புத்தியின் பலன் நமக்குப் பரிபூரணமாகக் கிடைத்திருக்கும். அவர் இந்த வழக்கி லிருந்து இடையில் விலகிககொளள நேர்ந்தது நிரம்பவும் விசனிக்கக் கூடிய சமபவம்; இருந்தாலும், அவர் எடுத்துக்காட்டிய முக்கிய மான ஓர் ஆட்சேபத்துக்கு நாம் சமாதானம் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். மாரமங்கலம் சமஸ்தானாதிபதியின் உண்மை யான பிள்ளை யார் என்பதை இப்போது விசாரிப்பதற்கு இந்தக் கோர்டடாருக்கு அதிகாரமில்லை என்பதையும், அது சிவில் சம்பந்தமான விஷயம் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளு கிறோம்; யார் உண்மையான வார்சுதார் என்ற விஷயத்தை நாம் இப்போது முடிவு கட்டி அந்தப்படி சமஸ்தானத்தின் சன்னத்தை அவர் பேருக்கு மாற்ற நமக்கு அதிகாரமில்லை என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். அந்த அதிகாரம் ஜில்லா கலெக்டரைச் சேர்ந்த தென்பது நமக்குத் தெரியாத விஷயமல்ல. இருந்தாலும், நாம் இந்த வாாசு விஷயத்தை எதற்காகப் பரிசீலனை செய்ய நேர்ந்த தென்றால், இநத மைனர் அவருக்கு எவ்விதச் சம்பந்தமு மில்லாத எவளோ ஒரு கிழவியைக் கொன்றுவிட்டார் என்றால், அதற்கு அர்த்தமில்லாமல் போகிறதன்றி, அவர் பைத்தியம் பிடித்த வராக இருந்தாலன்றி, அப்படிச் செய்ய நியாயமில்ெையன நினைக்கக் கூடியதாக இருக்கிறது. அந்தக் கிழவியை இவர் ஏதோ ஓர் உள்கருத்தோடு தான் கொன்றிருக்கிறார் என்பதையும், அதனால் அவருக்கு என்ன அநுகூலம் ஏற்படுவதைக் கருதி அப்படிக் கொன்றார் என்பதையும், சர்க்கார் கட்சியார் ருஜூப்படுத் தாவிட்டால, இவர் பேரில கொலைக்குற்றம் சுமத்த சட்டம் இடங் கொடுககாது. ஆகவே, இவருக்கும் அவளுக்கும் உள்ள சந்பந்தமோ, உறவு முறைமையோ, அல்லது வேறுவிதத் தகராறோ என்ன என்பதை சர்க்கார் கட்சியார் முன்னாக ம.க.ll-13