பக்கம்:மதன கல்யாணி-3.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192 மதன கல்யாணி ருஜூப்படுத்தியே தீர வேண்டும். கருப்பாயி இவர்களுடைய பங்களாவின் தென்னஞ் சோலையில் ஒளிந்திருக்க, இவர்கள் அவளைக் கண்டுபிடித்து அடித்துச் சித்திரவதை செய்த சமயத்தில், தான் இவருடைய தாய் என்பதை அவள் வெளியிட்டவுடனே, இவர்கள் அதிக உக்கிரமாக அவளை அடித்துக் கீழே வீழ்த்திக் கைகால்களை எல்லாம் கட்டி சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; இவர்கள் அவளை அவ்வளவு கொடுரமாக நடத்தி அப்படிப்பட்ட கொலை செய்வதற்கு, அவள் இவருடைய தாய் என்பதை வெளியிட்டதே காரணமாக இருக்க வேண்டுமன்றி, அவள் முதல் நாள் ரிஜிஸ்டரான பத்திரத்தை எடுத்துக் கொண்டு போனதையும், மறுநாள் வந்து ஏதோ உத்தே சத்தோடு ஒளிந்திருந்ததையும் எண்ணி இவர்கள் அவ்வளவு கொடிய கொலையைச் செய்திருப் பார்கள் என்று நினைக்க முடியாது. ஒரு கிழவி சமுத்திரத்திலிருந்து எடுக்கப்படடு கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருடைய பங்களாவில் இருக்கிறாள் என்ற விஷயம், அதற்கு சமீபத்திலுள்ள இவர் களுடைய பங்களாவுககு எட்டியே இருக்க வேண்டும். மறுநாள் இவர்கள் அதை கேட்டிருப்பாாகள். அதன் பிறகு இவர்களுக்கு பயமுண்டாகிவிட்டது. தாங்கள் அவளைக் கொல்ல முயன்றோம் என்பதை அவள் வெளியிடுவாள் என்ற பயமும, அவள தும்முடைய தாய் என்பதையும் அவள் அவசியம் வெளிப்படுத்து வாள் என்ற பயமும் உண்டாக, அதனாலே தான் இந்த மைனர் மறுநாள் மாலையில் கிருஷ்ணா புரத்து ஜெமீந்தாருடைய பூஞ்சோலையில் மறைந்திருந்து, அவள் முக்கியமான ரகசியத்தை வெளியிடப் போகும் சமயத்தில் அவளைக் குத்தினார் என்பது பகிஷ்காரமாகத் தெரிகிறது. அதுவும் தவிர, இறந்து போன கிழவி தனது வாக்குமூலத்தில், தான் இவருடைய தாய் என்றும், அதை வெளியிட்டதன் மேலே தான் தன்னை இவர்கள் கொன்றார்கள் என்றும் கூறியிருக்கிறாள். ஆகையால் அவள் தாய், இவர் பிளளை என்பது எவ்வளவு தூரம் உண்மையானது என்பதையும, அந்தக காரணத்தைக் கொண்டே இவர் இந்தக் கொலையைச் செய்திருப் பாரா என்பதையும் கோர்ட்டார் பரிசீலனை செய்வது கட்டாய மான பொறுப்பாகிவிட்டது.