பக்கம்:மதன கல்யாணி-3.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 193 கருப்பாயியின் பிள்ளையான இவர் கல்யாணியம்மாளுக்கு எப்படிப் பிள்ளையானார் என்பதை விளக்குவதற்குக் கல்யாணி யம்மாளுடைய உண்மையான பிள்ளை எப்படி மறைந்து போனார் என்பதும், அதைக் கருப்பாயி எப்படி அறிந்து கொண்டு தன் மகனைக் கொணர்ந்து கொடுத்தாள் என்பதும் அவசியமாகத் தெரிய வேண்டிய விஷயங்கள். ஆகையால், இந்த மைனர் அவளை எணன கருததோடு கொன்றார் என்பதற்கு, மாரமங்கலம் சமஸ்தானாதிபதியின் உண்மையான மைனர் காணாமற் போனது முதல், இவர் வேஷதாரி மைனராக்கப்பட்டது வரையில் உள்ள விஷயங்கள் யாவும் இந்தக் கோர்ட்டாருக்குத் தெரிய வேண்டிய முககியமான அம்சங்களாகிவிட்டன. ஆகவே, அதற்கும் இதற்கும் நெருக்கமான சம்பந்தம் இருககிறதென்று நாங்கள் அபிப்பிராயப் படுகிறோம். சுருங்கச் சொல்லுமிடத்து, இவர்கள் இருவரும் முதல் நாளைய சாயுங்காலம அவளைக் கொல்ல முயன்ற குற்றத்தைச் செய்திருக் கிறாாகள்; மறுநாள் சாயுங்காலம் முதல் குற்றவாளி கிழவியைக் கொலை செய்த குற்றம செய்திருக்கிறார். இந்த விஷயம் சாட்சி களால் ருஜூவாகி இருககிறது. பாரிஸ்டர் குரோட்டன் துரை சாட்சி களைக் குறுக்கு விசாரணை செய்தததில், அவர்களுடைய வாக்கு மூலத்துக்கு மதிப்பில்லாமல் செய்ய அவர் முயற்சித்திருக்கிறார். ஆனால், அவர் யாருக்காகப் பரிந்து பேசினாரோ அவரே குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார் ஆகையால், பாரிஸ்டர் குரோட்டனுடைய விசாரணைகள் யாவும் பயனற்றுப் போய் விட்டன. ஆகையால் கொலை செய்த குற்றத்துக்காக சட்டப்படி ஏற்பட்டுளள பூரணமான தண்டனையை முதற் குற்றவாளிக்கும, கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்கு ஏற்பட்ட தண்டனையை இரணடாவது குற்றவாளிக்கும் செய்து வைக்க நாம் கடமைப்பட்ட வர்களாகி விட்டோம். ஆனால், நமது தீர்மானத்தை முடிக்கும் முன், இந்த வழக்கில் வெளியான ஒரு முக்கியமான விஷயத்திலும் நம்முடைய அபிப்பிராயத்தை வெளியிட வேண்டியிருக்கிறது. கல்யாணியம்மாளுடைய உண்மையான பிள்ளை மதனகோபாலன் என்பதும், அவர் இத்தனை வருஷ காலமாகத் தம்முடைய சொத்து