பக்கம்:மதன கல்யாணி-3.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


194 மதன கல்யாணி சுதந்தரங்களை எல்லாம் அனுபவிக்கமாட்டாமல் இருந்து வந்தார் என்பதும், இந்த முதல் குற்றவாளியான கருப்பாயியின் குமாரர் இத்தனை வருஷகாலம் அக்கிரமமாக மைனரின் ஸ்தானத்தில் இருந்து வந்திருக்கிறார் என்பதும், ஆனால் கல்யாணியம்மாள அந்த விஷயத்தில் கருப்பாயி பொன்னம்மாள் ஆகிய இருவர்களா லும் ஏமாற்றப்பட்டுப் போனார் என்பதும் சந்தேகமற ருஜூவாகி இருக்கின்றன. அந்த சமஸ்தானத்தின் சன்னத்தை மதனகோபாலன் என்பவர் பேரில் மாற்றுவதற்கு ஜில்லா கலெக்டர் துரை கடமைப் படடவர் ஆதலால், அவர் அவ்வாறு உடனே மாற்றுவது சட்ட சம்மதம் என்பதை நாம் அவருக்குச் சிபார்சு செய்கிறோம். ஆனால், கல்யாணியம்மாள பல வருஷங்கள் வரையில முதல குற்றவாளியே தமது பிள்ளை என்று மதித்து வந்து, பிறகு உண்மையை அறிந்து கொண்டிருக்கிறார். ஆனால அப்படிட பட்ட நிலைமையில், எந்த மனிதரானாலும், தாம் அதுகாறும செய்து வந்தது பெருத்த தவறென்பதை பகிறங்கப்படுத்த மாட்டார்கள். ஆகையால், அதற்குப் பின்னாலும் அநத அம்மாள் இந்த ரகசியத்தை மறைத்து வைத்தது மன்னிக்கத்தக்க குற்றம் என்று நாம் அபிப்பிராயப்படுகிறோம். வேலைக்காரியான பொன்னம்மாளே இந்த மோசக்கருத்து நடப்பதற்கு மூலாதாரமான வளாக இருந்தாலும், அவள் தனது எஜமானியம்மாள் மீது வைத்த அளவிறந்த அபிமானத்தினால் அப்படிச் செய்தாளேயன்றி, தனது சொந்த லாபத்தை உத்தேசித்து அப்படிச் செய்ததாகத் தோன்ற வில்லை. அவள் அப்படிச் செய்தது சட்டப்படி குற்றமாகு மானால், போலீசார் அவள் மீது பிரத்தியேகமான ஒரு வழக்கை நடத்த இதன் மூலமாக அநுமதிக்கப்ப்டுகிறார்கள். இது நிற்க, இனி நாம் இந்தக் குற்றவாளிகளுக்கு இன்னின்ன தண்டனை என்று சொல்வ தொன்றே மிஞ்சி நிற்கிறது, சட்டத்தைக் கண்டிப்பாக நிறைவேற்றுவதானால், குற்றவாளிக்கு மரண தண்டனையே உரியதாகும்; இவர் இத்தனை வருஷ காலம் மைனராக இருந்தது இவருடைய குற்றமல்ல. பிறருடைய மோசத்தினால் இவர் அப்படி இருக்க நேர்ந்தது. அப்படிப்பட்ட பெருத்த பதவிக்கு தான் இயற்கையிலேயே உரியவர் என்று இவர் நினைத்திருக்க, அந்தக கிழவி திடீரென்று தோன்றி இவா தனனுடைய பிள்ளை எனறால,