பக்கம்:மதன கல்யாணி-3.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 மதன கல்யாணி பங்களாவே மிகவும் அழகானதாகவும், மனோகரமானதாகவும் காணப்பட்டது. சோலையைக் கடந்து பங்களாவின் வாசலை யடைநத மதன கோபாலனுக்கு அது யாருடைய பங்களா என்பதை அறிய வேண்டும் என்ற தடுக்க முடியாத ஒர் அவா உண்டாயிற்று. அவன் உடனே நிமிர்ந்து முன்புறச் சுவரில் அடிக்கப்பட்டிருந்த பளபளப்பான மூன்று பித்தளைத் தகடுகளைப் பார்த்தான். ஒரு தகட்டில் சாயுஜ்ய நிலையம் என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. "ஆகா! சரியான பெயர்தான! இந்த இடம் சாயுஜ்ய லோகத்தைப் போலவே காணப்படுகிறது" என்று நினைத்துக் கொண்ட மதனகோபாலன் மற்றொரு தகட்டை நோக்க, அதில் மிஸ் பாலாம்பாள் அம்மாள் என்ற பெயர் அழகான எழுத்துகளில் பெரிது பெரிதாகச் செதுக்கப்பட்டிருந்தன. "ஓகோ இது யாரோ ஒரு தாசியினுடைய பங்களா போலிருக்கிறது" என்று யூகித்துக் கொண்ட மதனகோபாலன் மூன்றாவது தகட்டையும் பார்த்தான். அதில் மாரமங்கலம் மைனர் துரை என்ற எழுத்துகள் காணப் பட்டன. அதைக் கண்ட மதனகோபாலன் மிகுந்த வியப்பும் திகைப்பும் அடைந்தான். அப்போதே அவனுக்கு உண்மை இன்னதென்பது விளங்கியது. பாலாம்பாள் என்ற பெயருடைய ஒரு பெண் நாடகத்திலிருக்கிறாள் என்பதை மோகனாங்கி சொல்ல அவன் கேட்டிருந்தான். முன்னோர் அதிகாரத்தில் இந்த மைனர் நாடகக்காரியைத் தேடிக் கொண்டு அலைவதாகக் கண்மணியம்மாள் அவனுக்குத் தெரிவித்ததும் நன்றாக நினைவிருந்தது. ஆகவே, அந்த மைனர் பாலாம்பாளை அழைத்துக் கொண்டு வந்து கடற்கரை ஓரத்திலிருந்த அந்தப் பங்களாவில் டிைத்திருக்கிறான் என்பதை மதனகோபாலன் யூகித்துக் கொண்டான். அதற்கு மேல் அந்த பங்களாவின் வாசலில் நிற்பதற்கு அவனது மனம் இடந் தரவில்லை ஆகையால், அவன் அதை விட்டு விசையாக நடந்து மேலும ராஜபாட்டை யோடு அரைக்கால் மயில் தூரம் நடந்து போனான். அப்போது மணி ஆறாகிவிட்டது. மாலை மங்கிக கொண்டு போனது. கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் தனது பங்களா விற்குத் திரும்பி வந்திருப்பார் என்ற நினைவுண்டானதன்றி அவன் மெலிந்து போயிருந்த நிலைமையில் அவ்வளவு தூரம் நடந்து வந்தது ஒரு விதமான களைப்பையும் அயர்வையும்