பக்கம்:மதன கல்யாணி-3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 மதன கல்யாணி கோபாலன் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் ஆகிய மூவரும் முதலில் செல்ல, அவர்களைச் சேர்ந்த சுற்றத்தினரும், தொடர்பினரும், பொது ஜனங்களுமான சுமார் ஐந்நூறு மனிதர்கள் பின்னால் தொடர்ந்து வந்தனர். அப்போது மதனகோபாலனது மனமும் தேகமும் ஆகாயத்தில் பறந்தனவென்று சொல்வதே பொருத்த மாகும். தனது தாயை எப்போது பார்க்கக் கிடைக்கும் என்ற ஆவல் மின்சார சக்தி போல அவனைப் பிடித்து மிகமிக விசையாகத் தள்ளிக் கொண்டே போனது. இரண்டு நிமிஷ நேரத்தில் எல்லோரும் தம்புசெட்டித் தெருவிலிருந்த அந்த ஜாகையை அடைந்தனர். ★ ★ ★ 33-வது அதிகாரம் அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாழ் அந்த ஜாகையின் வாசல் திண்ணையில் வேலைக்காரர்களும் சுருக்கெழுத்து குமாஸ்தாவும் உட்கார்ந்திருந்தனர். இரண்டு சோடாப்புட்டிகள் திண்ணையில் இருந்தன. டாக்டா கேசவலு நாயுடுவின் வாக்குமூலம் முதல் ஜட்ஜியினது தீர்மானம் வரையில் உள்ள விவரங்கள் எல்லாம் அடங்கிய சுருக்கெழுத்துக் காகிதங்கள யாவும் குமாஸ்தா தமது கையில் வைத்துக் கொண்டிருந்தார். சிவஞான முதலியார் முதலிய சகலமான ஜனங்களும் அங்கே வந்ததைக் கண்ட சுருக்கெழுத்து குமாஸ்தாவும் வேலைககாரர் களும் எழுந்து வணக்கமாக நிற்க, உடனே சிவஞான முதலியார் குமாஸ்தாவை நோக்கி, "எஜமானியம்மாள் என்ன செய்கிறார்கள்? உள்ளே இருக்கிறார்களா?" என்று மிகுந்த ஆவலோடு கேட்க, உடனே மேற்படி குமாஸ்தா, "எஜமானியம்மாள் உள்ளே தான இருக்கிறார்கள். அவர்களுக்கு மயக்கம் வருகிறதென்று இரண்டு சோடாப்புட்டிகள் வாங்கிக் கொண்டு வரும்படி என்னை அனுப்பி னார்கள். நான் கடைக்குப் போய் புட்டிகளை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தேன், மெத்தையின் கதவு மூடி உட்புறத்தில் தாளிடப் பட்டிருக்கிறது. ஒருவேளை படுத்துத் தூங்குகிறார்களோ என்னவோ ஒன்றும் தெரியவில்லை. சுமார் இரண்டு நாழிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/201&oldid=853340" இலிருந்து மீள்விக்கப்பட்டது