பக்கம்:மதன கல்யாணி-3.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 199 நேரமாக நான் இங்கேயிருந்து அடிக்கடி மேலே போய் கதவை அழுததிப் பார்த்துவிடடு வருகிறேன்" என்றார். அதைக் கேட்ட சிவஞான முதலியார் மிகவும் வியப்படைந்து, "அப்படியானால், நாங்கள் அனுப்பிய விசாரணை விவரக் காகிதங் களை எல்லாம் நீர் அவர்களுக்குப் படித்துக் காட்டவில்லையா?" என்றார். சுருக்கெழுத்து குமாஸ்தா, "கருப்பாயியின் மரணாந்த வாக்குமூலத்தை நான் படித்த வரையில் அவர்கள் நல்ல நிலைமை யிலே தான் இருந்தாாகள. அந்த வாக்குமூலத்தைப் படித்தவுடன், அவர்கள் பைத்தியங் கொண்டவர் போல மாறிவிட்டார்கள்; எழுந்து அங்குமிங்கும் போய்த் தடுமாறித் தவித்தார்கள் உடனே நாற்காலியில் படுத்துத் தமக்கு மயக்கம் வருகிறதென்றும், இரண்டு சோடாப்புட்டிகள் வாங்கிக் கொண்டு வரும்படியும் சொல்லி என்னைக் கீழே அனுப்பினார்கள. நான் கீழே வந்து சோடாப்புட்டீ களோடு போய்ப் பாாக்கிறேன். மேன்மாடத்தின் கதவு உட்புறத்தில் தாளிடப்பட்டிருக்கிறது. அதுமுதல் கதவு திறக்கப்படவே இல்லை" என்றார். அந்த வரலாற்றைக் கேடட சிவஞான முதலியார், மதனகோபா லன், கிருஷ்ணாபுரம ஜெமீந்தார் முதலிய எல்லோரும் பலவித சந்தேகமும் கவலையும் கொள்ளலாயினர். உடனே கிருஷ்ணாபுரம் சுருக்கெழுத்து குமாஸ்தாவை நோக்கி, "உள்ளே அவர்களைத் தவிர வேறே தாதிகள் யாராவது இருக்கிறார்களா?" என்றார். சுருககெழுத்து குமாஸ்தா, "வேறே யாருமில்லை. அவர்களும் நானுமே தனியாக இருநதோம்" என்றார். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், "அப்படியானால், இது சந்தேகாஸ் பதமாகத் தான் இருக்கிறது. உண்மையாக அவர்களுக்கு மயக்கம் வந்திருந்தால், அந்த நிலைமையில் அவர்கள் தாமிருந்த இடத்தை விட்டுக் கதவு வரையில் வர முடிந்திருக்காது; அப்படி முடிந்திருந் தாலும், கதவை உட்புறத்தில் தாளிட எவ்வித முகாந்திரமுமில்லை. இப்படிப்பட்ட ஆபத்தான விசாரணை சமயத்தில் பட்டப்பகலில் அவர்களுக்குத் தூக்கம் வந்திருக்கும் என்று நினைக்கவும் முடியாது. அவர்கள சுயஉணர்வோடு இருந்திருப்பார்களானால், இந்த