பக்கம்:மதன கல்யாணி-3.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


200 மதன கல்யாணி விசாரணையின் மிகுதி விபரங்களை அறிந்து கொள்ளாமல் இரண்டு நாழிகை நேரமாகக் கதவை மூடிக் கொண்டு படுத்திருக்க மாட்டார்கள். ஆகையால், உள்ளே ஏதோ விபரீதம் நடந்திருக்கிற தென்றே நினைக்க வேண்டி இருக்கிறது. கதவை மூடித் தாளிட்டுக் கொண்டு ஒருவேளை விஷத்தைக் கிஷத்தைத் தின்றிருப்பார்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது" என்றார். அதைக் கேட்ட மதனகோபாலன் திடுக்கிட்டு மிகுந்த பதைப்பும், கலக்கமும், ஆவலும் அடைந்து, "ஐயோ! என்னுடைய அம்மாளை நான் உயிரோடு பார்க்கப் போகிறேனா! ஈசுவரா! என் விஷயத்தில் இதுவரையில் சதிசெய்து, நான என தாயாரைப் பார்க்காமல் பிரித்து வைத்த நீ, நான் நிரந்தரமாகவே அவர்களைப் பார்க்க முடியாமல் செய்துவிட நினைக்கிறாயோ! அப்படிச் செய்தால், நான் இனி இந்த உயிரை ஒரு நொடியும் சுமந்திருப்பேன் என்று நினைக்காதே! என்று கூறிப் பிரலாபிக்கத் தொடங்கினான். உடனே சிவஞான முதலியார், "சரி, மேலே போய்க் கதவை இடித்துப் பார்ப்போம்" என்று கூறிய வண்ணம், மற்ற எல்லோரை யும் வாசலிலேயே இருக்கச் செய்து கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், மதனகோபாலன், சுருக்கெழுத்து குமாஸ்தா, சில வேலைக்காரர் கள் முதலியோருடன் படிகளின் வழியாக ஏறி மேன்மாடத்திற்குச் சென்றார். சென்று, வேலைக்காரர்களை விட்டுக் கதவை இடிக்கச் செய்ய உடபுறம் நிச்சப்தமாக இருந்தது. கதவில் ஏதேனும் இடை இருக்கிறதோ என்று அவர்கள் ஆராய்ந்து பார்த்தனர். ஒன்றும் காணப்படவில்லை; அவர்கள் முன்னிலும் அதிக வலுவாக ஓங்கிக் கதவை இடித்து உரக்கக் கூவிப்பார்த்தனர். மறுமொழியே கிடைக்க வில்லை. ஆகையால், உட்புறத்தில் ஏதோ விபரீத சம்பவம் நிகழ்ந் திருக்கிறதென்ற நிச்சயம் எல்லோரது மனதிலும் எழுந்தது; அளவிற்கு மிஞ்சிக் குடித்தவன் முகவிகாரம் அடைந்து தத்தளித்துத் தள்ளாடி விழுந்து பிதற்றுவது போல, மதனகோபாலன் கலவர மடைந்து மிகவும் பரிதாபகரமான நிலைமைக்கு வந்துவிட்டான். வேலைக்காரர்கள் எல்லோரும் பதறிப் போயினர்; அவர்களுள் சிலர் கீழே இறங்கி நாலைந்து வீடுகளிற்கப்பால் இருநத இரும்புக் கடை ஒன்றிற்கு ஒடி உளி, வெட்டிரும்பு, சுத்தியல் முதலிய