பக்கம்:மதன கல்யாணி-3.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 201 ஆயுதங்களை வாங்கிக் கொண்டு ஓடிவந்து மேன்மாடக் கதவைப் பலவந்தமாகத் திறந்துவிட்டனர். உடனே அங்கிருந்தோருள் இரண்டு தாதிகள் மாத்திரம் உள்ளே சென்று மேன்மாடம் முழுதும் பார்த்துவிட்டு மிகுந்த வியப்படைந்தவர்களாய், "எஜமானியம் மாள் எங்கேயும் காணோமே!" என்றனர். உடனே, அங்கிருந்தோர் யாவரும் பதறிப் போய, அடக்க முடியாத ஆத்திரத்தோடு உள்ளே நுழைந்து எல்லா இடங்களையும் ஆராய்ச்சி செய்து பார்த்த பின், அங்கே இருந்து மொட்டை மெத்தைக்கு ஏறிய படிக்கட்டைக் கண்டு, அதன் வழியாக மேலே ஏறி மொட்டை மெத்தையை அடைந்து, மிகுந்த ஆவலோடும் திகிலோடும் நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்தனர். கல்யாணியம்மாள் எவ்விடத்திலும் காணப் படவில்லை. உடனே பெருத்த திகில் ஒவ்வொருவரது மனதிலும் எழுந்து சுருக்கென்று தைத்தது. கல்யாணியம்மாள் மொட்டை மெத்தையிலிருந்து கீழே விழுநது உயிரை விட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகி, வேதனை செய்யத் தொடங்கியது. வீட்டினது முன்புறத்தில அவள் விழவில்லை என்பது நிச்சயமாகத் தெரிந்தது. அதற்கு இரண்டு பக்கங்களிலும் வீடுகளிருந்தமை யால், மிகுதியிருந்ததான பின்புறத் தோட்டத்திலே தான் கல்யாணி யம்மாள் விழுந்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாயிற்று. உடனே, எல்லோரும் பின்புறமாக ஓடி மொட்டை மெத்தையின் கட்டைச்சுவரில் கையை வைத்துக் குனிந்து கீாே பார்த்தனர்; பார்க்கவே, ஆகா! என்ன கொடுமை! என்ன பரிதாபம்! மிகவும் கிடுகிடு பாதாளமாகத் தோன்றிய தரையில் கல்யாணியம்மாளது தேகம் அலங்கோலமாகக கிடந்தது அவர்களது திருஷ்டிக்குத் தெரிந்தது. "ஐயோ! அம்மாள் அதோ விழுந்து கிடக்கிறார்களே!" என்று வேலைக்காரர்கள் மிகுந்த வியப்போடு கூறினர். அங்கிருந்த எல்லோரது உடம்புகளும் பதறிப் போய் கிடுகிடென்று ஆடின. திகிலும் நடுக்கமும் உசசி மயிரைப் பிடித்து உலுக்கின. அவ்வளவு உச்சியிலிருந்து விழுந்த கல்யாணியம்மாள் அதுகாறும் உயிரோ டிருக்கக் கூடாதா என்ற சந்தேகமும், உடனே அவளிடத்தில் ஒடிப் பார்க்க வேணடும் என்ற பெருத்த ஆவலும், வீராவேசமும் எல்லோரினது மனதிலும் எழுந்து அவர்களைத் துண்டின. அப்படியே கீழே குதித்து விடலாமா என்ற பைத்தியக்கார