பக்கம்:மதன கல்யாணி-3.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


202 மதன கல்யாணி நினைவும் மூர்க்கமும் சிலருக்கு உண்டானதானாலும் அப்படியே குதித்தால், தங்களது எலும்பு கூட மிஞ்சாதென்ற பேரச்சம் அவர்களைப் பின்னுக்கிழுத்தது. அப்போது, "கீழே இறங்கித் தோட்டத்துக்குப் போவோம" என்று கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் சொல்ல ஆரம்பிக்க, அந்தச் சமயத்தில் மதனகோபாலன், "ஐயோ! என்னம்மா! இப்படியும் மோசம் செய்யலாமா! என்னைப் பிள்ளை என்று ஏற்றுக்கொள்ள உங்களுககு மனமில்லையா! அல்லது, நான் கேவலம் வீணை வாசிக்கிறவனாக இருந்தவ னெனற இழிவைக் கருதி என முகத்தில் விழிக்க மனமிலலையா? ஐயோ! அம்மா! என்னை உண்மையான வார்சுதாரன் என்று ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாடடேன்! உங்களுடைய சமஸ்தானத்தில் எனக்கு ஒரு செல்லாக்காசும் இல்லை என்று நீங்கள் சொல்வதானாலும், அதற்கும் நான் இணங்குவேனே! நீங்கள் உயிரோடிருந்து என்னைத் தங்களுடைய பிள்ளை என்று ஒப்புக் கொண் டிருந்தால், அது ஒன்றையே நான் குபேரசம்பத்தாக எண்ணி, நான் என்னுடைய பழைய நிலைமையிலேயே இருந்து, எப்போதாவது உங்களைப் பார்க்கும்படியும் ஆனந்தத்தை அடைந்து கொண் டிருப்பேனே! இப்படியும் மோசம் செய்யலாமா! என் விஷயத்தில் உங்களுக்கு இவ்வளவு வர்மமா! உங்களுடைய வயிற்றில் வந்து பிறந்தும் நீங்கள் உயிரோடிருந்த வரையில் உங்களுக்கு நான் எவ்விதத்திலும் உபயோகப்படாத மகா பாதகன் ஆகிவிட்டேனே! ான்ற தாய்க்குப் பயன்படாத இந்தப் பாழும் உடம்பை நான் தூக்கிச் சுமப்பதில் இனி யாருக்கு லாபம்! அம்மா! நான் உங்களை விடமாட்டேன். இந்த உலகத்தில் நான் உங்களைப் பாாத்துப் பேசக் கொடுத்து வைக்காவிட்டாலும், அடுத்த உலகத்திலாவது நீங்கள் என்னைப் புத்திரன் என்று ஒப்புக்கொள்ளுங்கள். இதோ நானும் வருகிறேன்" என்று பலவாறு பிரலாபித்து நைந்துருகி அழுது அனலிடு மெழுகாய் ஒடிக்கொண்டிருந்த மதனகோபாலன் குபிரென்று கைப்பிடிச்சுவரின் மீது பாய்ந்து தோட்டத்திற்குள் குதித்து விட்டான். அதைக் கண்ட யாவரும், "ஐயோ! ஐயோ! மதனகோபாலனும் கீழே விழுந்து விட்டானே! அடே பாவி இவனும் மோசம் செய்துவிட்டானே!" என்று கூறிக கொண்டே