பக்கம்:மதன கல்யாணி-3.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 203 தடதடவென்று விசையாக மெத்தையை விட்டுக் கீழே இறங்கி ஒடி வந்தார்கள். எல்லோரும் இரண்டாவது மாடத்தை விட்டுக் கீழே இறங்கி, அடிவாசலுக்கு வந்த சமயத்தில் இன்னொரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்தது. மதனகோபாலனும் கீழே வீழ்ந்துவிட்டான் என்பதை உணர்ந்த கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் தாமும் குதித்து விடலாமா என்று எண்ணினார் ஆனாலும், ஒருவேளை மதன கோபாலன் உயிரோடிருக்கலாகாதா என்ற நம்பிககையினால் தூண்டப்பட்டவராய் மெய்ம்மறந்து மேலே இருந்து கீழே ஒடி அடிவாசலிற்கு வந்தார். அதுகாறும் அவருக்கிருநத மனோதிடம் எல்லாம் அந்த இரண்டு நிமிஷத்திற்குள் விலகிப் போகவே, அவர் ஸ்மரணைதப்பி வேரற்ற மரம் போல திடீரென்று தரையில் வீழ்ந்து விட்டார். அங்கே வந்த சிவஞான முதலியாரும், மற்ற மனிதர்களும் நடையிலிருந்த உள்.கதவைத் திறந்து கொண்டு, அடிக்கட்டின் வழியாகப் பின்புறத் தோட்டத்திற்குப் போக முயல, நடைக்கதவு மூடி வெளிப்புறத்தில் பெருத்த பூட்டினால் பூட்டப் பட்டிருந்ததன்றி, அதன்மேல் ஒரு துணி கட்டி அரக்கு முத்திரைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆகவே, அந்தச் சமயத்தில் என்ன செய்வ தென்பது தோன்றாமையால், அவர்கள் பைத்தியங் கொண்டவா கள் போல அங்குமிங்கும் ஒடித்தவிக்கிறார்கள். அப்போது அந்த வீட்டின் பக்கத்திலிருந்த வெற்றிலை பாக்குக் கடைக்காரன், "இது பஞ்சுக்கிடங்கு இது நிறையப் பஞ்சுப்பொதிகள கிடக்கினறன. இது கோவிந்தப்ப நாயக்கன் தெருவில உளள நரசிம்மலு செட்டி யாருடையது. யாராவது அங்கே ஒடித் திறவுகோலை வாங்கிக் கொண்டு வாருங்கள்" என்றான். அநதச் சமயத்தில் அங்கே பைசைகி லில் வந்து வேடிக்கை பார்த்தவாகளுள் ஒருவர் உடனே அந்த வண்டியில ஏறி உடகார்ந்து கொண்டு தலைதெறிக்க ஓடினார். இன் னொருவர் அடுத்த தெருவிலிருந்த ஒரு டாக்டரை அழைத்து வரும் பொருட்டு காற்றாகப் பறந்தார். வேறொருவர் சற்று துரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் வண்டிகளை அமர்த்தி அழைத்துக் கொண்டு வந்தார். வாசலிலிருந்த சிலர் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரைத் துக்கிக் கொண்டு போய் ஒரு மறைவில் விடுத்து, ாரத்துணியைக் கொணர்ந்து முகத்தைத் துடைத்து விசிறி