பக்கம்:மதன கல்யாணி-3.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


204 மதன கல்யாணி கொண்டு வீசினார்கள். சிவஞான முதலியார் முதலிய மற்ற எல்லா ஜனங்களும் நெருப்பின் மேல் நிற்பவர் போலத் துடிதுடித்து நிற்கிறார்கள். அவ்வாறு பதினைந்து நிமிஷ நேரம் சென்றது. திறவுகோலுக்குப் போனவர் திரும்பி வந்து சேர்ந்தார். அதற்குள் சிலர் பூட்டின் மேல் இருந்த அரக்கு முத்திரைகளையும் துணிக்கட்டையும் விலக்கித் தயாராக வைத்திருந்தனர். அடுத்த நிமிஷத்தில் பூட்டு விலக்கப் பட்டது. கதவைத் தள்ளிக்கொண்டு ஜனங்கள் எல்லோரும் ஆவேசம் கொண்டவர்கள் போல உள்ளே ஒடுகிறார்கள். அவ்வளவு உச்சியலிருந்து விழுந்ததால் இருவரும் சின்னாபின்ன மாக நொறுங்கிப் பரமவிகாரமாகவும் கோரமான தோற்றத்தோடும் இருப்பதைத் தாங்கள் பார்க்க வேண்டுமே என்று எல்லோருக்கும் ஒரு பக்கத்தில் மனம் கூசியது. உட்புறம் முழுதும் பஞ்சுப்பொதி கள் குவிந்து மலை போலக் கிடந்தனவாதலால், அவர்கள செல்வதற்கு வழிகூடக் கிடைப்பது அரிதாகிவிட்டது. அப்படி இருந்தும், பலர் மிகவும் பிரயாசைப்பட்டு, வழி செய்து கொண்டு உள்ளே நுழைந்து, பின்புறத்து வாசலைத் திறந்து கொல்லைப் பக்கத்தை அடைந்தனர். ஆகா! என்ன அதிர்ஷ்டம்! என்ன பாக்கியம்! என்ன ஆனந்தம்! கல்யாணியம்மாளும், மதனகோபா லனும் அசைவற்றுக் கைகால்களை எல்லாம் விரித்துக் கொண்டு பிணம் போலக் கிடந்தனரானாலும், அவர்களது உடம்பில் அடிப் பட்ட காயங்கள் ஒன்றும் தோன்றவில்லை. அப்படி இருந்ததற்கு தெய்வாதுகூலமாக ஒரு வசதி ஏற்பட்டிருந்தது. அந்தப் பஞ்சுப் கிடங்கில், சில வருஷங்களுக்கு முன் வாங்கி அடைக்கப்பட்டு கடடுக்கடையாக இருந்த ஐம்பது மூட்டைகளில் இருந்த பஞ்சுகள் மட்கிக் கட்டிதட்டிப் போயிருந்தமையால், அந்தக் கிடங்கின் சொந்தக்காரர் ஆள்களைக் கொண்டு அந்த மூட்டைகளை எல்லாம பின்புறக் கொல்லையில் தள்ளிப் பிரித்துவிட்டு, கட்டுதட்டி இருந்தவைகளை எல்லாம் உடைத்துவிட்டு, இரண்டு மூன்று நாட்களாக வெயிலில் காயவிடடிருந்தார். அந்தப் பஞ்சு ஒரு சுமார் 10-கஜ தூரம் வரையில் பரப்பப்பட்டிருந்ததன்றி, தரையிலிருந்து நான்கு முழ கனமுடையதாக இருந்தது. கல்யாணியம்மாளையும்