பக்கம்:மதன கல்யாணி-3.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 205 மதனகோபாலனையும் காப்பாற்ற வேண்டும் என்றே தெய்வம் அந்த மூட்டைகளை மடகிப் போகச் செய்து அங்கே மெத்தை போலப் பரப்பிவைக்கத் துாண்டியதோ எனறு எல்லோரும் நினைத்து வியப்புறும்படி, அந்தப் பஞ்சுப்பரப்பு அவர்களுக் கெதிரில் காணப்பட்டது. அதைக் கண்ட ஜனங்கள் மிகுந்த ஆவேசமும் நம்பிக்கையும் அடைந்து, பஞ்சுப்பரப்பின் மீதேறி அவாகள் இருவரும் கிடந்த இடத்தை அணுகினர். அந்தச் சமயத்தில், ஒரு டாக்டரும் அங்கே வந்து குதித்தார். அவரைக் கண்டவுடனே எல்லோரும் விலகி அவருக்கு வழிவிட, அவர் விரைவாகப் பாய்ந்து, முதலில் கல்யாணியம்மாளது இருதயத்தின் மீதும், பிறகு மதனகோபாலனது இருதயத்தின் மீதும், நாடி பார்க்கும் கருவியை வைத்துப் பார்த்தார். உடனே அவரது முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. அவர்கள் இறந்து போய்விட்டார்களே என்று கவலை கொண்டிருந்த ஜனங்கள் எல்லோரும் டாக்டரது முகக்குறிப்பில் இருநது, அவர்களது உயிர் இருப்பதாக நிச்சயித்துக் கொண்டவர்களாய், மிகுந்த களிப்பும் ஆனந்தமும் அடைந்தனர். அப்போது டாக்டர் சிவஞான முதலியாரை நோக்கி, "இவர் களுடைய உயிருககு அபாயம நேரிடுமோ என்ற பயமே வேண்டாம. கீழே இவ்வளவு கனமாகப் பஞ்சு போடப்பட்டு இருந்தாலும், இவர்கள நிரம்பவும் உச்சியிலிருந்து விழுந்தார்கள் ஆகையால் திகிலும் அதிர்ச்சியும் உண்டானதால், மூச்சடைத்துப் போய்ப் பொறி கலங்கி இருக்கிறது. அதோடு, இவ்வளவு கனமான மனிதர்கள் அவ்வளவு உயரத்திலிருந்து வேகமாகக் கீழே வந்ததில், இவர்களுடைய உடம்புக்குள் இருக்கும் சுவாசாசயம், வயிறு, ாரல், குடல்கள் முதலிய உறுப்புகள் எல்லாம் கொஞ்சம் மேலே ஏறி ஸ்தான பேதப்பட்டிருக்கின்றன. ஆகையால், இவர்களை இரண்டு மூன்று பேர் சேர்த்து மெதுவாகத் துக்கி நிற்க வைத்து கக்கத்தில் கையைக் கொடுத்து தரையைவிட்டு உயர்த்தி இரண்டு மூன்று தரம் குலுக்கிய பின் படுக்க வைக்க வேண்டும். மேலே ஏறி இருக்கும் கருவிகள் எல்லாம் கீழே இறங்கிப்போம். உடனே மூச்சுண்டாக்க நாம் வேறோர் உபாயம் செய்வோம்" என்றார். உடனே தாதிகளுள் நால்வர் கல்யாணியம்மாளையும், சில வேலைக்காரர்கள் மதன கோபாலனையும் தூக்கி மெதுவாக