பக்கம்:மதன கல்யாணி-3.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


206 மதன கல்யாணி இரண்டு மூன்று முறை குலுக்கி, அவர்களது உடம்பில் உள்ள கருவிகள் எல்லாம் கீழே இறங்கி அதனதன் ஸ்தானத்திற்கு வரும்படி செய்து கீழே படுக்க வைத்தனர். டாக்டர் தமது கையில் கொணர்ந்திருந்த ஒரு திராவகத்தை எடுத்து, அவர்களது நெற்றிப்பூட்டில் தடவி, வாயைத் திறந்து தொண்டையிலும் விடுத்த பின், அவர்களது வயிற்றில் கையை வைத்து அழுத்தி அழுத்தி எடுக்க, வயிறு அதற்கு மேலே இருந்த சுவாசாசயத்தை அழுத்தி, மூச்சுக் காற்றை வெளிப்படுத்தியது. அவ்வாறு மூச்சுக் காற்று வெளிப்பட்டவுடனே வெளியிலிருந்த புதுக்காற்று உள்ளே சென்றதாகையால், சுவாசம் மெதுவாக வரத் தொடங்கியது. அதைக் கண்ட ஜனங்களினது சந்தோஷத்திற்கும் ஆனந்தத்திற்கும் அளவு சங்கியை இல்லை என்றே சொல்ல வேண்டும். அவர்கள் இருவரும் பிழைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கை உடனே உண்டாகிவிட்டது. டாக்டர் வயிற்றை அழுத்தி அழுத்தியே சுவாசம் நன்றாக வரும்படி செய்தபின், சிவஞான முதலியாரை நோக்கி, "சரி; இவர்களைப் பற்றி இனிமேல் பயமில்லை! மூச்சு இனி நிற்காது. ஆனால், பொறிகலங்கிப் போயிருப்பதால, இவர்களை மோட்டார் வண்டியில் வைத்து உடனே ஜாகைக்குக் கொண்டு போய், கோதுமைத் தவிட்டை வறுத்து, தலை முதலிய இடங்களிலெல்லாம் ஒற்றிடம் கொடுத்துக் கொண்டே இருந்தால், ரத்த ஓட்டம் சீர்ப்பட்டுவிடும்; உடனே ஸ்மரணையும் திரும்பிப் போகும். ஆகையால், கால தாமசம் செய்யாமல் தூக்குங்கள்" என்றார். அதற்குள் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் தெளிவடைந்து எழுந்து மிகுந்த ஆவலோடு கொல்லைப் பக்கம் ஓடிவந்து, கல்யாணியம்மாளும் மதனகோபாலனும் பிழைத்திருக்கிறார்கள் என்ற நற்செய்தியைக் கேள்வியுற்று, மிகுந்த களிப்பும், ஆனந்தமும், ஆவேசமும் கொண்டவராய், மதனகோபாலனைத் தூக்கிய மனிதரோடு சேர்ந்து கொண்டார். அதன் பிறகு இரண்டு நிமிஷ காலத்தில், கல்யாணியம்மாள் ஒரு மோட்டாரில் வைக்கப்பட்டாள். சிவஞான முதலியாரும, தாதி களும அதில் ஏறி உட்கார்ந்து கொண்டனர். இன்னொரு வண்டி யில் மதனகோபாலன விடப்படடான். அதன்மேல் கிருஷ்ணாபுரம்