பக்கம்:மதன கல்யாணி-3.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17 உண்டாக்கியது. தனது உலாவை அவ்வளவோடு நிறுத்தித் திரும்பித் தனது ஜாகைக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆனால், மாரமங்கலம் மைனரும் பாலாம்பாளும் இருந்த பங்களாவின் வாசல் வழியே மறுபடியும் போவதற்கு அவனது மனம் கூசியது; ஆகையால் அவன் அதே வழியாகத் திரும்பி வராமல், கடற்கரையின் மணற்பரப்பின் பக்கமாக உள்வாயில் இறங்கி நூறு கஜத்திற் கப்பாலிருந்த தண்ணிரை நோக்கிச் சென்று, அலைகள் வந்து வந்து மோதித் திரும்பிய கரையின் ஒரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். ராஜ பாட்டையில் சிறிது தூரத்திற்கொன்றாக நிறுத்தப்பட்டிருந்த கரை பக்கங்களிலிருந்த மின்சார விளக்குகள் எல்லாம் கொளுத்தப்பட்டுப் போயின; சூரியன் மறைந்து போய் ஒரு நாழிகை நேரமாகி விட்டதாகையால், அந்தச் சந்தி வேளையில் வெளிச்சமெல்லாம் மழுங்கி இருளே மேலாடிக் கொண்டிருந்தமையால், நூறுகஜ தூரத்திற்கப்பால் வரும் மனிதரது அடையாளம் கண்டுகொள்ளக் கூடாததாக இருந்தது; அந்த இடத்தில், கண் கண்ட தூரம் வரையில் எந்தப் பக்கத்திலும் மனிதரே காணப்படவில்லை ஆகையால் அந்த இடம் நிருமானுஷ்யமாகவும், பயங்கரமாகவும் இருந்தது. அப்படிப்பட்ட நிலைமையில் தனியாக வந்து கொண்டிருந்த மதனகோபாலன் அடிக்கடி தனது காலடிவரையில் வந்து திரும்பிச் சென்ற அலைகளைக் கவனித்தபடியாக வந்தான். அந்த இடத்தில், மாரமங்கலம் மைனரும் பாலாம்பாளும் இருந்த பங்களாவின் பின்புறமும் அதற்கடுத்த தென்னஞ் சோலையின் பின்புறமும் சமுத்திரத்தின் கரையோரமாக வந்தனவாகையால், அலைகள் சென்று அவற்றின் பின்புறத்து மதிலில் மோதின. அந்த இடத்திற்கு வந்த மதனகோபாலன், காயம் கட்டப்பட்டிருந்த தனது காலில் அலைகள் மோதிவிடுமோ என்ற அச்சம் கொண்டவனாய், மதிலின் ஒரமாகத் தொற்றிக் கொண்டே மிகவும் ஜாக்கிரதையாக நடந்து போனான். அவ்வாறு போனவன், பங்களாவின் பின் புறத்தைக் கடந்து தென்னஞ் சோலையின் பின்புறமாக போன சமயத்தில், மதிலுக்கு அப்பால் அந்தச் சோலைக்குள் ஏதோ பெருத்த ஆரவாரமான கூக்குரல் கேட்டது. "ஐயோ! அப்பா அடிக்கறாங்களே! கொல்லறாங்களே! அடி வாலாம்பா என்னெ