பக்கம்:மதன கல்யாணி-3.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


208 மதன கல்யாணி இரண்டொரு வார்த்தையில் சுருக்கமாகக் கூற, அதைக் கேட்ட யாவரும் முன்னிலும் ஆயிரம் மடங்கு அதிகரித்த பிரமிப்பும் களிப்பும் அடைந்தனர். சிலர் ஒற்றிடம் தயாரிப்பதற்காக ஓடினர். மோகனாங்கியின் மனநிலைமை இன்னதென்பதைச் சொல்வது அசாத்தியமான காரியமாய் இருந்தது. அவன் தனது உயிருக்கே தீங்கிழைத்துக் கொள்ள முயற்சித்ததையும், அவன் அவ்வாறு உணர்வற்றுப் பிணம் போலக் கிடந்ததையும் உணர. அவளது மனம் சித்திரவதைக்கு உள்ளாகி சகிக்க இயலாமல் தடுமாறித் தவித்தது. அவன் பிழைப்பானோ மாட்டானோ என்ற ஐயமும் கவலையும் பேராவலும் பொங்கி எழுந்து கரைகடந்த சஞ்சலத்தில் அவளை ஆழ்த்திவிட்டன. ஆனால், அதுகாறும், அவன் தனது சொந்த சகோதரன் என்று தான் நினைத்திருந்தது பொய்யாகிப் போனதையும், தனக்கும் அவனுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லாமற் போனதையும் காண, அவளுக்கு இந்த உலகமே பாழடைந்து போனதாகத் தோன்றியது. தனக்கு உயிருக்குயிராக இருந்த தனது நற்குணச் சகோதரனை உயிருடன் வேறொருவருக் குப் பறிகொடுத்து விட்டுத் தான் அநாதையாகி இருப்பதைவிடத் தான் தனது உயிரை மாய்த்துக் கொள்வதே நன்மையாகத் தோன்றியது. ஆனால், அவன் மகா உன்னதமான பதவிக்குரிய வன ஆன விஷயம் ஒருபுறத்தில் கரைகடந்த குதுகலத்தையும் பிரம்மாநந்தத்தையும் சுரக்கச் செய்து கொண்டிருந்தது. அவ்வாறு ஒன்றிற்கொன்று முரண்பட்ட பலவகையான உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் மாறிமாறி இன்பமும் துன்பமும் அடைந்தவ ளாகத் தத்தளித்த மோகனாங்கி அங்குமிங்கும் ஒடி, வேலைக்காரர் கள் தயாரித்துக் கொடுத்த தவிட்டு மூட்டையை வாங்கி, மதன கோபாலனது சிரத்திலும், உடம்பிலும் வைத்து வைத்து ஒற்றிடம் கொடுக்கத் தொடங்கினாள். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருக்குக் கைகால் ஆடாமல் போய்விட்டன. தாம் என்ன செய்வது என்பதை உணராமல், அவர் மிகுந்த கவலையும் விசனமும் அடைந்தவராய், மதனகோபாலனது பக்கத்தில் கிடந்த ஒரு நாற்காலியில் ஒய்ந்து உட்கார்ந்துவிட்டார். மதனகோபாலனே மாரமங்கலம் சமஸ்தானத்தின் உண்மையான மைனர் என்ற விஷயத்தைக் கேட்ட முதல், அதனால் ஏற்பட்ட சந்தோஷப்