பக்கம்:மதன கல்யாணி-3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 209 பெருக்கையும் ஆனந்த ஊற்றையும் தாங்கலாற்றாது அவரது இருதயம் படீரென்று தெறித்துவிடுமோ என நினைக்கத்தக்க அதிவிம்மிதமான நிலைமையில் அவர் கிடந்து மிதந்து, மதன கோபாலன் தப்பிப் பிழைத்து எழுந்திருக்க வேண்டுமே என்ற கவலையும் சஞ்சலமும் அடைந்தவராய், மற்றவர் செய்யும் பணி விடைகளையும், மதனகோபாலனது முக மாறுதல்களையும் கவனித்த வண்ணம் வீற்றிருந்தார். அவ்வாறு மோகனாங்கியும், மற்றவரும் வறுக்கப்பட்ட தவிட்டு ஒற்றிடம் கொடுத்துக் கொண்டே போக, இரவு சுமார் ஒன்பது மணி சமயத்தில் மதன கோபாலன் தனது கண்களை விழித்துக் கொண்டு பார்க்கத் தொடங்கினான். அவனது விழிகளின் இளக்கம், மூளையின் குழப்பத்தையும் கலக்கத்தையும் காண்பித்தது; நாழிகை ஏறஏற அவர்கள் கொடுத்த ஒற்றிடத்தின் சூட்டை அவன் உணர்ந்ததாகத் தோன்றியது. அரை நாழிகைக்குப் பிறகு அவன் வாயைத் திறந்து பேசும் திறமையை அடைந்து, அவர்கள் ஒற்றிடம் கொடுத்த போதெல்லாம், "உஸ் அப்பா! சுடுகிறது. அதிகமாக அழுத்த வேண்டாம்" என்று சொல்ல ஆரம்பித்தான். அப்போது அவனுக் காகக் காய்ச்சித் தயாராக வைக்கப்பட்டிருந்த கொழுமோரை மோக னாங்கி எடுத்து, "அண்ணா! வாயைத் திறந்து இதைக் கொஞ்சம் சாப்பிடு!" என்று, அன்பாகவும உருக்கமாகவும் கூற, அவன் வாயைத் திறந்து, அந்த மோரில் சிறிதளவு உட்கொண்டான். அவ்வாறு பருகப்பட்ட மோரினால், அவனுக்கு மிகுந்த மனோதிட மும் மனத்தெளிவும உண்டாயின. உடம்பும் சரியான நிலைமைக்கு வந்தது. "ஒற்றிடம் போதும், இனிமேல் வேண்டாம். என்னால் தாங்க முடியவில்லை" என்று கூறிய வண்ணம் மதனகோபாலன் எழுந்து உட்கார்ந்து திண்டில் சாய்ந்தபடி தனது கண்களை நன்றாகத் திறந்து தனது முகத்தை நாற்புறங்களிலும் திருப்பி உற்று நோக்கி, "நான் எங்கே இருக்கிறேன்? இங்கே படுத்திருந்த என்னுடைய அம்மாள் எங்கே? மொட்டை மெத்தையிலிருந்து விழுந்த நான் எப்படிப் பிழைத்தேன்?" என்றார். அதைக் கேட்ட கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், "அப்பா குழந்தாய்! என்ன காரியம் செய்தாய்! இபபடியும் கீழே விழுந்து உயிரைவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/212&oldid=853352" இலிருந்து மீள்விக்கப்பட்டது