பக்கம்:மதன கல்யாணி-3.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


212 மதன கல்யாணி இனி கொள்ளத் தேவையில்லை, இதுவரையிலும் நான் உனக்கு எப்படி, "அண்ணா" வாக இருந்தேனோ அதுபோல இனிமேலும் நான் உனக்கு அண்ணாதான்; நம்முடைய உறிவு முறைமையில் வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறதென்கிற நினைவையே நீ உன் மனசிலிருந்து விலக்கிவிடு. நான் என் தங்கையினிடத்தில் வைத்திருக்கும் வாத்சல்யம் அபாரமாக இருப்பதால், அதை அனுபவிக்க ஒரு தங்கை போதாதென்று எனக்கு இன்னமும் இரண்டு தங்கைகளை எசுவரன் கொடுத்தார். அதைத் தவிர வேறில்லை" என்று கல்லும் கரைந்துருகும் வண்ணம் வாஞ்சை யாகக் கூறி, அவளை அன்போடு இன்னொரு முறை தடவிக் கொடுத்தான். அவனது சொற்களைக் கேட்ட மோகனாங்கியும், கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரும் ஆனந்த பரவசமடைந்து பூரித்துப் புளகாங்கிதம் உற்றனர். அவர்கள் அப்படிப்பட்ட ஆனந்த நிலைமையில் மனோகர விலாசத்தில் இருக்க, தேனாம்பேட்டையில் என்ன நடந்ததென் பதை நாம் கவனிப்போம்; கல்யாணியம்மாளையும் மற்றவர்களை யும் எடுத்துச் சென்ற மோட்டார் வண்டி கால்மணி நேரத்தில் தேனாம்பேட்டையில் உள்ள மாரமங்கலம் ஜெமீந்தாரது பங்களாவை அடைந்தது. உடனே கல்யாணியம்மாள் ஒரு கட்டிலில் எடுத்துவிடப்பட்டு அசையாமல் அவளது அந்தப்புரத் தில் கொண்டு போய்ச் சேர்க்கப்படடாள். அவர்களது பங்களாவில் இருந்த பணிமக்களில் பெண்மக்கள் பெரும்பாலோரும், ஆணமககள் சிலரும், கோமளவல்லியும் அன்றைய வழக்கு எப்படி முடியுமோ என்றும், மைனர் விடுதலை அடைவானோ அலலது தண்டனை அடைந்து விடுவானோ என்றும் பலவாறு நினைத்து மிகுந்த கவலையும் சஞ்சலமும் அடைந்து கசசேரிக்குப் போயிருந்த கல்யாணியம்மாள் முதலியோரினது வருகையைப் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்தவர் களாகக் காத்திருந்தனர். ஆனால், கல்யாணியம்மாள் அப்படிப்பட்ட விபரீதமான நிலைமையில் திரும்பி வருவாள் என்று அவர்கள் கனவிலும் நினைத்தவரல்லர். ஆதலால், அந்த மகா கோரமான காட்சியைக் கண்ட அவர்கள் எல்லோரும் திடுக்கிட்டு அளவிறந்த