பக்கம்:மதன கல்யாணி-3.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 213 வியப்பும் திகைப்பும் அடைந்து மைனர் ஒருவேளை மரண தண்டனை பெற்றதால், தங்களது எஜமானியம்மாள் மூர்ச்சித்திருக் கிறார்களோ என்று நினைத்து ஸ்தம்பித்து அப்படியப்படியே நின்றனர். தனது தாயினிடத்தில் அளவற்ற வாஞ்சையும் பயபக்தி விசுவாசமும் வைத்திருந்த நற்குணவதியான கோமளவல்லி பதறிப் போய், அவ்விடத்தில் சிவஞான முதலியார், சுருக்கெழுத்து குமாஸ்தா முதலிய அன்னியப் புருஷர்கள் இருப்பதையும் கவனியாமல், "என்ன! என்ன! ஏன் அம்மாள் இப்படி இருக்கிறார் கள்? கச்சேரியில் என்ன நடந்தது?" என்று கேட்டுக் கொண்டு ஓடோடியும் வந்து குதித்துத் தனது தாயின் அருகில் நின்று, தாயின் தேகத்தை ஆசையோடு கட்டிக் கொண்டாள். அங்கே இருந்த யாவரும் ஒரு நொடியும் காலதாமதம் செய்யாமல், கல்யாணியம் மாளுக்குரிய சிகிச்சை செய்வதில் தங்களது கவனத்தை எல்லாம் செலுத்திக் கொண்டிருந்தமையால், அவளது கேள்விக்கு எவரும் மறுமொழி கூறாமலே தங்களது அலுவலைக் கவனித்தனர். அவர்கள் தம்புசெட்டித் தெருவிலிருந்து வந்த போது கடைசியில் டாக்டர் சிவஞான முதலியாரைத் தனியாக அழைத்து, கல்யாணி யம்மாளது உடம்பை இறுக்கிக் கொண்டிருந்த ஆடையாபரணங் களை எல்லாம் விலக்கிவிட்டு ஒரேயொரு சிறிய வஸ்திரத்தை அணிவித்து ஒற்றிடங் கொடுத்துக் கொண்டு வரவேண்டும் என்றும், தாமும் கொஞ்ச நேரத்தில் மோட்டார் வண்டியில் வருவதாகவும், அதற்குள் அந்தச் சீமாட்டி தெளிவடைந்து கண்களைத் திறந்து கொண்டால், உடனே கொழுமோர் காய்ச்சிக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தார் ஆகையால், சிவஞான முதலியார் அநத விவரங்களை எல்லாம் தாதி பொன்னம் மாள் முதலிய முக்கியமான வேலைக்காரிகளிடத்தில் தெரிவித்து அப்படியே சிகிச்சை நடத்தச் சொல்லிவிட்டு, அங்கே இருந்த ஆண்பிள்ளைகளை எல்லாம் வெளியில் போய் இருக்கும்படி அனுப்பிய பின் சுருக்கெழுத்து குமாஸ்தாவை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த புஸ்தக சாலைக்குள் போய் உட்கார்ந்து கொண்டாா. கல்யாணியம்மாள் அப்படிப்பட்ட சந்தேகமான நிலைமையில் இருக்கையில், அவருக்குத் தாம் வீட்டிற்குப் போக வேண்டும் என்ற விருப்பமே உண்டாகவில்லை ஆனாலும்