பக்கம்:மதன கல்யாணி-3.pdf/217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


214 - மதன கல்யாணி அன்றைய காலை முதல் மாலை வரையில் அவர் எவ்வித ஆகாரமும் கொள்ளாமல், கச்சேரியில் விசாரணையைக் கவனிக்க நேர்ந்தது பற்றி அவர் பசிதாங்களினால் மிகவும் களைப்போடு இருந்தார். அதுபோலவே அந்தச் சுருக்கெழுத்து குமாஸ்தாவும் தேகபாதைகளால் துன்பமுற்றிருந்தார். அதை உணர்ந்த சிவஞான முதலியார், அவரிடத்தில் மிகுதியிருந்த வாக்குமூலங்களையும், ஜட்ஜிகளின் தீர்மானத்தையும் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து விட்டு அவரது ஜாகைக்குப் போகும்படி சொல்ல, அவர் இரண்டொரு நாழிகை சாவகாசத்தில் அவ்வாறே செய்து காகிதங் களை எல்லாம் கொடுத்துவிட்டு அனுமதி பெற்றுக் கொண்டு தமது வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தார். சிவஞான முதலியார் அந்த வாக்கு மூலங்களை எல்லாம், கல்யாணியம்மாளுக்குப் படித்துக் கர்ட்டும் பொருட்டு உள்ளே அனுப்பிய பின் சமையலறைக்குப் போய் சொற்ப ஆகாரம் பார்த்துக் கொண்டு மறுபடியும் அதே இடத்திற்கு வந்து, கல்யாணியம்மாளது அப்போதைய தேகஸ்திதியைப் பற்றி விசாரித்த பின் ஒரு சாய்மான நாற்காலியில் படுத்திருந்தவர் சிறிது நேரத்தில் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரது நிலைமை அங்ங்ன மிருக்க, தாதிகள் எல்லோரும் ஒன்றுகூடிக் கல்யாணியம்மாளுக்கு தவிட்டு ஒற்றிடம் கொடுத்துக் கொடுத்து, அவளது இரத்த ஒட்டத்தை துரிதப்படுத்தி மூளைக்குத் தெளிவை ஊட்டிக் கொண்டும், தேகத்தின் மரப்பை விலக்கிக் கொண்டும் இருந்தனர். மிகுந்த கவலையும், ஆவலும், கலக்கமும் அடைந்து பதறி உட்கார்ந்திருந்த கோமளவல்லியம்மாள் கச்சேரியில் என்ன நடந்த தென்று சில தாதிகளிடத்தில் கேட்க, அவர்கள் மைனருக்கும், பாலாம்பாளுக்குத் தண்டனை ஆகிவிட்டதென்றும், மதன கோபாலனே உண்மையான பிள்ளை என்று ருஜூவாகிவிட்ட தென்றும், கல்யாணியம்மாள் சில வாக்குமூலங்கள் வரையில் அறிந்து கொண்டவுடன் மேன்மாடத்திலிருந்து கீழே விழுந்து விட்டாள் என்றும், தீர்மானத்தைக் கேட்ட பின் மதனகோபாலன் தாயைப் பார்க்க ஆவல் கொண்டு ஓடி வந்தவன், அவள் வீழ்ந்து கிடக்கக் கண்டு தானும் வீழ்ந்து விட்டான் என்றும், அவனைக் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் மைலாப்பூரில் உள்ள அவரது ஜாகைக்கு எடுத்துக் கொண்டு போயிருக்கிறார் என்றும், பஞ்சுப்