பக்கம்:மதன கல்யாணி-3.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 மதன கல்யாணி அடிக்காதேடி! அடே பையா! எம் உசிரு போவுதடா! நான் சொம்மா வந்தேண்டா திருடக்கிருடவல்லெயடா ஐயோயப்பா! சாமீ! ஒன்னே கும்பிடறேண்டா!" என்று யாரோ ஒரு கிழவி கூக்குரலிட்டது நன்றாகத் தெரிந்தது. அதைக் கேட்ட மதன. கோபாலனது நெஞ்சு திடுதிடுத்தது. உடம்பு கிடுகிடென்று ஆடியது. அவன் பிரமிப்பும் திகைப்பும் அடைந்து அதை நன்றாகக் கவனிக்கலானான். அப்போது உடனே ஒரு யெளவனப் ஸ்திரீயின் கீச்சுக் குரலும் அவள் ஒரு தடிக்கம்பை வைத்துக் கொண்டு படேர் படேரென்று கிழவியை அடித்த ஒசையும் கேட்டன. அந்த ஸ்திரீ மிகவும் அகங்காரமாக, "அடீகிழமுண்டை! எங்கேயடி வந்தாய் தோட்டத்துக்குள்? நேற்று ராத்திரி நீயும் அந்தக் கட்டையன் குறவனுமாக வந்து எங்களை எல்லாம் கட்டிப் போட்டுவிட்டுப் போன போது எங்களுக்கும் இபபடித் தானடி இருந்தது. ராத்திரி நீயும் அவனும் பத்திரத்தைக் கொண்டு போய் என் வாயில் மண்ணைப் போடப் பார்த்தீர்களே! அடீ! இப்போது மறுபடியும் எதற்காக வந்து இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாயடி! எங்கள் தலைமேல் இன்னமும் கல்லைப் போடவா வந்திருக்கிறாய்? இனி நீ இந்தத் தோட்டத்தை விட்டு உயிரோடு வெளியிலே போகாமல் உன்னை இங்கேயே பலி போட்டுவிடுகிறேன்" என்று கூறிய வண்ணம் கிழவியை ஈவிரக்கமின்றி நன்றாக மொத்திக் கொண்டே இருக்க, அந்த அடிகளைப் பொறுக்கமாட்டாமல் அந்தக் கிழவி லபோ லபோவென்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ள, அதற்குள் மைனரும் பாய்ந்து பாய்ந்து அந்தக் கிழவியை தனது பலம் கொண்டமட்டும் உதைத்து, "அடீ அம்பட்ட நாயே! நீ இன்றைக்கு என்னிடத்தில் வசமாக மாட்டிக் கொண்டாய்! உன் வீட்டுக்கு என்னை வரவழைத்து என் பணங் களையும் பிடுங்கிக் கொண்டு திருடனிடத்திலும் என்னைக் காட்டிக் கொடுத்த முண்டையல்லவா நீ அது போனால் போகிற தென்றால், அவனை நேற்றைக்கும் அழைத்து வந்து பத்திரத்தை எடுத்துப் போக உனக்கு அவ்வளவு துணிவா! உன்னையும் அந்தப் பத்திரத்தை எடுத்துவரும்படி உங்களைத் தூண்டிவிட்ட அந்தப் பட்டிச் சிறுக்கியையும் நான் என்ன பாடுபடுத்தி வைக்கிறேன் பார். பத்திரம் ரிஜிஸ்டராய்விட்டதென்று கண்டு