பக்கம்:மதன கல்யாணி-3.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 217 கிடங்காம்; மட்கிப் போயிருந்த சில மூட்டைகளைப் பிரித்து அவர்கள் பின்புறத்தில் இடுப்புயரம் காயவைத்திருந்தார்களாம் அதன் மேல் நீங்கள் விழுந்து ஸ்மரணை தப்பிக் கிடந்தீர்கள். அங்கே இருந்து எடுத்து இங்கே கொண்டு வந்தார்கள்?" என்றாள். கல்யாணியம்மாள், "ஆ! என்ன ஆச்சரியம்! நான் எல்லாத் துனபங்களையும் பூர்த்தியாக அனுபவிக்காமல் உலகத்திலிருந்து தப்பிப் போய் விடுகிறேனே என்று நினைத்து அவர்கள் அந்தப் பஞ்சைப் பரப்பி வைத்தார்களா ஆகா! என்ன என்னுடைய துர்பாக்கியம்! உலகத்தில் உள்ள எல்லோரும் பணம் வேண்டும் என்று அழுவார்கள; குழந்தை குட்டிகள், வீடு, வாசல், நிலம் முதலிய பாக்கியம் இல்லையே என்றழுவார்கள்; நானோ இந்த உலக வாழ்க்கையே வேணடாம் என்றும், இதைவிடடுத் தப்பி ஓடி விட்டால், அது போதும் என்றும் எணணிச் சாக நினைத்தால், அதுகூட எனக்குப் பலிதம் ஆகமாட்டேன என்கிறதே! இப்படிப் பட்ட மகா பாவியும் உலகத்தில் இருப்பார்களா? ஐயோ! என்ன கஷ்டம்! என்ன கஷ்டம்! சாகவும் மாட்டாமல், இருக்கவும் மாட்டாமல் இப்படி இருதலைக் கொள்ளி எறும்பு போலச் சித்திரவதைப் பட்டு நான் சீர்கெட்டழிய வேண்டும் என்று அந்தப் பாழும் தெய்வம் என் தலையில் எழுதிவிட்டதே! பெண்ணே கோமளவல்லி! நான கீழே விழுந்து உயிரைவிடப் போன போது உன்னைப் பற்றி நினைத்துத் தான் விழுந்தேன்; நீ ஒருத்தி தான் என்னிடத்தில் உட்ண்மையான பயபக்தி விசுவாசமுள்ளவள். எனக்கு இந்த உலகத்தில் இனிஒரு நொடியுமிருக்க இஷ்டமில்லை. நான் இருந்தால், எனக்கு என்றைக்கும் மாறாத மானக்கேடும் இழிவும் தலைகுனிவும உண்டாகும் ஆகையால், நீ உடனே எழுந்து போய், ஒரு வைர மோதிரத்தை எடுத்து, அதிலிருக்கும் கல்லை எடுத்துப் பொடியாக்கிக் கொண்டு வந்து கொடு; இந்த இரவு நீங்குவதற்குள் நான் பிராணனை விட்டுவிட வேண்டும். பொழுது விடிந்தால், நான மனிஷி எனறு பெயர் வைத்துக் கொண்டு வெளியில் வரமுடியாது; எங்கே! எழுந்துபோ கண்ணே! என்னுடைய சொல்லை மறுக்காதே! நீ ஆயிரங்காலம் தீர்க்க சுமங்கலியாக இருந்து அமோகமாக வாழ்வாய்" என்று அன்பாக