பக்கம்:மதன கல்யாணி-3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 - மதன கல்யாணி வற்புறுத்திக் கூறிக் கோமளவல்லியின் மோவாயில் தனது கையை வைத்துக் கெஞ்சி மன்றாட அந்த வார்த்தைகளைக் கேட்டுப் பதறிப் போன கோமளவல்லி தனது தாயின் கையைப் பிடித்து மெதுவாக வருடிய வண்ணம், "அம்மா ஏன் இப்படிக் கவலைப் படுகிறீர்கள்? கச்சேரியில் நடந்த விசாரணை நமக்கு அநுகூல மாகவே முடிந்திருக்கிறது அதனால் நமக்கு எவ்வித அவமானமும் ஏற்பட நியாயமில்லை. நீங்கள் பெருத்த சந்தோஷ சங்கதியைக் கேட்கப் போகிறீர்கள். சீதாதேவி அக்கினிப் பிரவேசம் செய்து யாதொரு களங்கமுமில்லாமல் எழுந்தது போல நீங்கள் இறந்து போய் மறுபடி புனர்ஜென்மம் எடுத்தீர்கள். உங்களைப் பிடித் திருந்த துர்பாக்கியம் எல்லாம் நேற்றோடு ஒழிந்து போய்விட்டது. இனிமேல் துன்பமே உங்களை அணுகாது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று பணிவாகவும் மரியாதையாகவும் கூறினாள். அதைக்கேட்ட கல்யாணியம்மாள் வியப்படைந்து, "கச்சேரியில் நடந்த விசாரணை நமக்கு அநுகூலமாகவா முடிந்துவிட்டது? அப்படியானால், மைனரை விட்டுவிட்டார்களா? என்மேல் எவ்விதக் குற்றமும் ஏற்படாமல் போய்விட்டதா?" என்று மிகுந்த ஆவலோடு கேட்க, கோமளவல்லியம்மாள், "அம்மா! மைனர் தீவாந்திர சிகூைடியடைந்து விட்டார். அவர் உங்களுடைய சொந்தப் பிள்ளையல்லவாம்" என்றாள். கல்யாணியம்மாள், "ஆ! என்ன! தீவாந்திர சிகூைடியா! அப்படியானால், இந்தக் குடும்பம் வார்சில்லாமல் நசித்துப் போகுமே! நீ சொல்வது நிஜந்தானா? இது தானா சந்தோஷ சங்கதி?" என்று அளவிலடங்கா வியப்போடு கேட்க, கோமளவல்லியம்மாள், "ஆம் அம்மா! அந்த மைனருக்கு திவாந்திர சிகூைடிதான் கிடைத்து விட்டது. ஆனால் வேறொருவர் உங்களுடைய நிஜமான பிள்ளை என்று ஜட்ஜி தீர்மானித்து விட்டார்" என்றாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாளது மனம் விவரிக்க சாத்திய மில்லாத சஞ்சலமும் மனவெழுச்சியும் அடைந்தது. அந்த ஒரு நிமிஷமும் மகா கொடிய நீண்ட கற்பகாலம் போலத் தோன்றியது; கல்யாணியம்மாள், "என்ன! என்ன வேறொருவரா என் பிள்ளை? அந்தப் பிள்ளை எங்கே இருக்கிறதாம்?" என்று சகிக்க இயலாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/221&oldid=853362" இலிருந்து மீள்விக்கப்பட்டது