பக்கம்:மதன கல்யாணி-3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 219 பதைப்போடு வினவினாள். எல்லா விஷயங்களையும் உடனே சொல்லிவிட்டால், தாய்க்கு அது சகிக்க முடியாமல் போய்விடும் என்ற நினைவினால் கோமளவல்லியம்மாள் அதுவரையில் வார்த்தைகளை அடக்கிப் பேசி வந்தவளாதலால், இன்னார் தான் சொந்தப்பிள்ளை என்பதை அதற்கு மேல் தான் மறைக்கலாமா கூடாதா என்று சிறிது நேரம் அவள் சிநதனை செய்தாள். ஏனெனில, தங்களது ஜாகைக்கு வந்து வீணை கற்றுக் கொடுத்து வந்த மதனகோபாலன் கடைசியாகத் தனது தாயினிடத்தில் ஏதோ துன்மார்க்கமான காரியத்தைச் செய்ய எத்தனித்து அதன் பொருட்டு வேலைக்கு வராமல் நின்று போனவனாதலால், அப்படி நடந்து கொண்டவனே சொந்தப்பிள்ளை என்பதை வாயில் வைத்துச் சொல்ல, அந்த யெளவன மடந்தைக்கு மனமில்லை. ஆகையால் அவள் தனது தாயை நோக்கி அன்பாகவும் பணிவாக வும் பேசத் தொடங்கி, "உங்களுடைய சொந்தப் பிள்ளை இன்னார் என்பதை ஜட்ஜி கண்டுபிடித்து விட்டார். ஆனால் அதை நான் சொன்னால் உங்களுடைய மனசுக்கு நம்பிக்கைப்படாது; ஆகையால் இதோ இருக்கும் பாக்கி வாக்குமூலங்களையும் ஜட்ஜியின் தீர்மானத்தையும் நான் படித்தே காட்டுகிறேன்; அதைக் கேட்டால உங்களுக்கு எல்லா விஷயங்களும் திருப்திகரமாகத் தெரிந்துபோம்" என்றாள். அபபோது, சகிக்க முடியாத ஆவலினாலும சங்கடத்தினாலும், வதைப்பட்டுத் துடிதுடிததிருந்த கல்யாணியம்மாள், "நீ எல்லா வற்றையும் படிக்கிற வரையில் என் மனம் பொறுக்காது. அவன் யார் என்பதை மாத்திரம் நீ சொல். பிறகு விவரங்களைப் படிக்கலாம்" என்றாள். கோமளவலலியம்மாள, "சொநதப் பிளளை நம்முடைய மதனகோபாலனாம்" எனறாள். கல்யாணியம்மாள் திடுககிட்டெழுந்து உடகார்ந்து, "யார்? யார்? இங்கே வீணை கற்றுக கொடுத்த பையனா?" என்று மிகுந்த ஆவலோடு கேடக, அவளது கைகாலகளும் தேகமும் ஆவேசத் தினால் வெடவெட வெனறு ஆடுகினறன. உள்ளம் பொங்கி எழுந்து விண்ணிலிருந்ததோ மண்ணிலிருந்ததோ என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/222&oldid=853363" இலிருந்து மீள்விக்கப்பட்டது