வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 221
சரியானபடி சேலை கட்டிக் கொள்ளுங்கள்" என்று கூறிய வண்ணம், கட்டிலில் கிடந்த விலையுயர்ந்த ஒரு பனாரீஸ் சேலையை எடுத்து உடுத்திவிட முயல, கல்யாணியம்மாள் தனது அவசரத்திலும் ஆத்திரத்திலும் அதைத் தானே வாங்கித் தாறுமாறாகச் சுற்றிக் கொண்டபடி, "அடி பொன்னி போட்டார் தயாராகிவிட்டதா?" என்று மிகவும் பதற்றமாக அதட்டிக் கேட்க, அந்தச் சமயத்தில், "அம்மா! அம்மா!" என்று யாரோ ஒருவர் கதறிப்பதறி அந்த அந்தப் புரத்தின் வாசலண்டை ஓடிவந்த ஒசை உண்டாயிற்று; அந்த அபூர்வமான குரலைக் கேடடு யாவரும் திடுக்கிடடு மருண்டு தங்களது கவனத்தையும் திருஷ்டியையும் வாசல் பக்கம் திருப்பி வியப்புற்று நிற்க, அடுத்த நிமிஷத்தில் மதனகோபாலன் தாயைப் பிரிந்த கன்று போல மிகுந்த வாஞ்சையும் ஆவலும் கரைபுரண் டோடவிட்ட முகத்தோடு, கல்யாணியம்மாளை நோக்கி ஓடி வந்தான். அப்படி வந்தவன் மதனகோபாலன் என்பதை உணர்ந்த நொடியில், கல்யாணியம் மாள் சன்னதங் கொண்டவள் போல ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, "வாடா! என் கண்ணே! என் முத்தே! என்தங்கமே" என்று கொஞ்சி அழைத்த வண்ணம் மதனகோபாலனை இறுகத் தழுவி உச்சி முகந்து முத்த மழை பொழிந்து, "அப்பா! மகனே! என் செல்வமே! என் பிள்ளைக் கலிதீர்த்த வள்ளலே! மாணிக்கமே! விலையில்லா நிதிக்குவியல் போன்ற இப்படிபபடட சற்புத்திரனை நான் பெற்றிருந்தும், இவ்வளவு காலம் பிரிந்திருக்க, நான் எப்படிப்பட்ட மகாபாதகம் செய்தேனோ! நான் யாருடைய பிள்ளையைப் பிரிநதேனோ யாருடைய குடும்பத்தைக் கலைத்தேனோ ஆகா! இப்போதாவது நம்மைச் சேர்த்து வைக்க, தெய்வத்துக்கு மனமிரங்கியதே! என்னபபா என் சீராளா மூன்றாவது பிராயத்தில் காணாமல் போன உன்னை நான் மறுபடி காணப் போகிறேனா என்று இரவு பகலாய் இரத்தக் கண்ணிர் சொரிந்து எவ்வளவு காலம் அழுதிருப்பேன் தெரியுமா! எமன் வாயில் பட்ட மார்க்கண்டேயன் மீண்டது போல நீ இப்போது வந்து சேர்ந்தாய்; அந்த மார்க்கண்டேயனைப் போல நீயும் என்றும் சிரஞ்சீவியாக வாழக்கடவை" என்று கூறினாள். அதற்குள் அந்தச் சீமாட்டியின் மனதில் பொங்கி எழுந்த பேராநந்த வெள்ளத்தினால், நெஞ்சடைந்து
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/224
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
