பக்கம்:மதன கல்யாணி-3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 225 ஜெனித்த என்னிடத்தில் ஏதாவது நற்குணங்கள் இருக்குமானால், அவைகள் தங்களால் கொடுக்கப்படட பிச்சையேயன்றி வேறல்ல." என்று மிகவும் மனம்நைந்து கூறினான். அந்தச் சமயத்தில் கல்யாணியம்மாள், தனக்குச் சமீபத்தில் சிவஞான முதலியார் வந்து நின்றதைக் கண்டு நாணமும் வெட்கமு மடைந்து மதனகோபாலனை விடுவிக்க, அந்தச் சமயத்தில் அவன், தனக்கருகில் வந்து நின்ற கோமளவல்லியம்மாளை நோக்கி திடுக் கிட்டு, "ஆ! கோமளவல்லி நீயா நிற்கிறாய்!" என்று மிகுந்த ஆவலோடும ஆசையோடும் கேட்க, அந்த யெளவனப் பெண்மணி, "அண்ணா" என்று வீரிடடுக் கதறிய வண்ணம் கரை கடந்த வாஞ்சையோடும ஆவலோடும் பாய, மதனகோபாலன் தனது தங்கையைக கட்டியனைத்துச் சீராட்டி, "ஆ! என் தங்கமே! உனனுடைய அருமையான நற்குண நன்னடத்தையைப் பார்த்த போதெல்லாம் என் மனம் என்ன நினைத்தது தெரியுமா? இப்படிப் படட தங்கை ஒருத்தி எனககு இருக்கக்கூடாதா? என்று எத்தனை தரம் என் மனம் எண்ணி எண்ணி ஏங்கியது தெரியுமா! நீ எனக்கு உண்மையிலேயே தங்கையாக இருப்பதனாலே தான் என் மனசில் சுவாமி அந்த நினைவைக் கொடுத்தார் என எண்ண வேண்டியிருக்கிறது! அமமா! நீ நலல உத்தமி; நீ தீர்க்க சுமங்கலி யாக நீடுழி காலம் வழ ாசுவரன் அருள் புரிவார்" என்றான். அதைக் கேட்ட கோமளவல்லியும் மற்ற எல்லோரும் தேவாமிரு தத்தைப் பருகுவோர் போல இனபமயமாக நிறைந்து ஆனந்த பாஷ்பம் சொரியலாயினர். அந்தச் சமயத்தில் அநத அந்தப்புரத்தின் வாசலில் வந்து, உள்ளே நுழைந்த கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் மகிழ்ச்சியும், பூரிப்பும் புன்னகையும் ஜ்வலித்த வதனத்தினராய் எல்லோரையும் பார்த்து உரக்கப் பேசத் தொடங்கி, "ஆகா! எனக்குப் பங்கில்லையா? நீங்கள் மாத்திரந்தானா எல்லா ஆனந்தத்தையும் அனுபவிக்கிறது? இது தருமநதானா? 'காத்திருந்தவன் பெண்ஜாதியை நேற்று வந்தவன் கொண்டு போன கதையாக இருக்கிறதே!” என்று நயமாகவும் சந்தோஷமாகவும் பேசிய வண்ணம் உள்ளே வந்தார். அவர் வந்ததைக் கண்டு யாவரும் திடுக்கிட்டுத் தங்களது கவனத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/228&oldid=853369" இலிருந்து மீள்விக்கப்பட்டது