பக்கம்:மதன கல்யாணி-3.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


226 மதன கல்யாணி அவர்மீது திருப்பினர். ஆனால் அவரைக் கண்ட உடனே கல்யாணியம்மாளினது மனதில் ஒருவித அருவருப்புத தோன்றியது. ஏனெனறால், அவர் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாா என்பது அப்போது அந்தச் சீமாடடிக்குத் தெரியாதிருந்தது. சில நாட்களுக்கு முன் தன்னிடம் வந்து தன்னை மிரட்டிய பசவண்ண செட்டியாரே வந்திருப்பவன என்று கல்யாணியம்மாள் நினைதத தன்றி மதனகோபாலனுக்காக வக்கீல் நோட்டீஸ் வந்ததற் கெல்லாம் அவரே மூலாதாரமான மனிதர் என்று அந்த மாது சிரோன்மணி நினைத்தாள் ஆதலால, தனது விஷயத்தில் கொஞ்சமும் தயை தாகூடினியம் பாராமல் நடந்து கொண்ட அநத மனிதரைக் கண்டு, அவருக்குத் தனது அந்தப்புரத்தில் என்ன வேலை எனறும் தனது உத்திரவின்றி அவர் ஏன் உள்ளே நுழைந தார் எனறும் நினைத்து ஆயாசமடைந்து அவரை நோக்கி, "ஐயா செடடியாரே! உம்முடைய சரக்கை எல்லாம் விற்பதற்கு இனி நீர் வேறே கடை பார்க்க வேண்டும; அது இங்கே விற்பனை ஆகாது. தாயும் பிள்ளையும் எப்படியும் சேர்ந்து கொளளுவாாகள். நடுவிலிருந்து கலகம் செய்யும் மனிதருடைய பாடுதான திண்டாட்ட மாகி விடும். போதும் நீர் உறவு கொண்டாட வந்தது. தயவு செயது விடைபெற்றுக் கொள்ளும்" என்றாள். அவ்வாறு தனது தாய் கிருஷனாபுரம் ஜெமீந்தாரிடத்தில் கடுமையான சொற்களை உபயோகித்ததைக் கண்ட மதனகோ பாலன திடுக்கிட்டு முகவாட்டமடைந்து தான் என்ன செயவ தென்பதை அறியாமல தத்தளிக்கலானான். சிவஞான முதலி யாரும், கச்சேரியில் அவரைப் பார்ததிருந்த வேலைக்காரர்களும் திகைப்பும் வியப்பும் அடைந்து ஊமைகள போல நின்றனர். அப்போது கிருஷணாபுரம் ஜெமீந்தார் கொஞ்சமும் பதறாமலும் தமது சந்தோஷத்தை மாற்றாமலும், வந்த போதிருந்தது போலவே, சுமுகமாகப் பேசத் தொடங்கி, "அம்மணி உங்களிடத்தில் இன்ன மும் வியாபாரம செய்ய என்னுடைய சரக்கென்ன விற்பனை ஆகாமல கடடுக்கடையாகக் கிடக்கிறதென்று பாாத்தீர்களா? உங்களிடத்தில் இன்னமும் யாா வியாபாரம் செய்வார்கள்? நீங்கள் தான் என்னிடத்தில் ஏற்கெனவே பட்ட கடனை இன்னமும