பக்கம்:மதன கல்யாணி-3.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19 உன்னை இன்றைக்கும் அந்தத் தேவடியாள் அனுப்பினாளோ! நீ இனி அவளைக் காணாமலே இன்றோடு மாண்டு போகும்படி செய்து விடுகிறேன். கத்துகிறாயா பேசாதே; வாயைத் திறக்காதே; கூச்சல் போட்டால் வாயைப் பார்த்து உதைப்பேன்" என்று கூறிய வண்ணம் அவளது முகத்திலும் மார்பிலும் ஓங்கி உதைக்க, அவளது வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இதர இடங்களிலிருந்தும் இரத்தம் ஒழுக ஆரம்பிக்க, அந்தக் கிழவிக்கு உடனே ரெளத்திரா காரமான கோபம் பொங்கியது. அவள் அதுவரையில் நயமாகக் கெஞ்சியதை விட்டு ஒலமிட்டுக் கதறித் தாண்டிக்குதித்துப் பாய்ந்து பாய்ந்து அவர்களோடு மடிபிடித்து யுத்தம் செய்யத் தொடங்கி, அவர்களை எட்டி உதைப்பதும், அடிப்பதும், குத்துவதும், கடிப்பதும், கூக்குரலிடுவதுமாக ஆரம்பித்து, "வாங்கடா! நீ ரெண்டு பேரு, நான் ஒரு கெயவி, ஒங்கிளுக்காச்சு எனக்காச்சு! எத்தினி நேரம் நீங்க என்னோடெ சண்டெ போடுவீங்களோ போடுங்கடா! அந்தக் கட்டையன் கொறவன் செத்துப்பூட்டானுன்னு பார்த்துக் கினிங்களா? இன்னம், சண நேரத்திலே அவன் இஞ்சே வந்து குதிச்சு ஒங்கக் கொடலைக் கிளிச்சி மாலையாப் போட்டுக்கப் போறான். பாருங்கடா! யாரையடா தேவடியாமுண்டையின்னு சொன்னே! அந்த மாதிரி சொன்ன நாக்கெ அறுத்துப்புடச் சொல்லறேன் இருடா! இதோ போவாமெ இறக்கறத்துக்குத் தாண்டா நாங்க இந்தப் பாடுபட்றோம். அடே கூறுகெட்ட நாயே! நீ எந்த எடத்துலெயோ கெடக்க வேண்டிய சின்னசாதிப் பயலெக் கொண்டாந்து நல்ல பதவியிலே வச்சா நீ தலெ காலு தெரியாமெ துள்ளி உளுந்துப் போறியேடா! வீணா அளிஞ்சு பூடாதேடா" என்று கூறிய வண்ணம், அவர்களோடு போராடத் தொடங்கினாள். அவளது துஷணை வார்த்தைகளைக் கேட்ட மைனருக்கு ரெளத்தி ராகாரமான கடுங்கோபம் பொங்கி எழுந்தது. உடனே அவன் பக்கத்தில் கிடந்த பெருத்த தென்னமட்டை ஒன்றை எடுத்து ஆத்திரமாக ஓங்கி, "ஆகா! என்ன சொன்னாய்! நானா சின்னசாதிப் பயல்! கேவலம் அம்பட்டச்சாதி நாய்க்கு இவ்வளவு வாயா! உன்னை இன்றோடு கொன்று போட்டுவிடுகிறேன்" என்று கூறிய வண்ணம் அந்த மட்டையால் அவளது இடுப்பில் பலமாக ஒர் அடி கொடுக்க, அதைத் தாங்கமாட்டாத அம்பட்டச்சி, "ஐயோ! அப்பா"