வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 227
கொடுக்கவில்லையே! எனக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை முதலில் தீர்த்துவிட்டு அதன் பிறகு சரக்குக் கேளுங்கள்" என்றாா.
அவரது சொற்களைக் கேட்ட கல்யாணியம்மாள் திகைப்பும் வியப்பும் கோபமும அடைநது, "என்ன செட்டியாரே! உமக் கென்ன பைத்தியம் முற்றிப் போய்விட்டதா. பூசை வேளையில் கரடியை விட்டு ஒட்டுவது போல, அழையாத வீட்டில் நுழைந்து வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று என்னென்னவோ உளறுகிறீரே! உம்மை யார் இந்த அந்தப்புரத்துக்குள் அனுமதி இல்லாமல வரச் சொன்னது? போம வெளியில்" எனறு அதட்டிக்
கூறினாள்.
அதைக் கேட்ட மதனகோபாலனது எண்சாண் உடம்பும் ஒரு சானாகக் குன்றியது. அவன் மாறிமாறித் தாயையும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரையும் பார்த்து அளவிறந்த சஞ்சலத்தோடு விழிக்கிறான். அப்போது கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் முன்னிலும் அதிகரித்த சந்தோஷமும் புன்னகையும் அடைந்து, "அம்மணி நான் வெளியில் போகத் தடையில்லை. உங்களுடைய பிள்ளையை இநதப் பதினைந்து வருஷகாலமாக என பிள்ளையாக பாவித்து வளாத்து இன்றைய தினம் உங்களிடம ஒப்புவிக்க நான் இங்கே வந்தேன். இந்தக் காரியமாக நான் இந்த அந்தப்புரத்தில் வருவதற்கு நீங்கள் எனக்கு அனுமதி கொடுக்க மாட்டீர்களா? உங்களுடைய பிள்ளையைச் சரியான நிலைமையில் திரும்பவும் ஒப்புக் கொண்டு விட்டதாக நீங்கள் எனக்கு ரசீது கொடுங்கள்; அதன் பிறகு அதற்காக எனக்கு நீங்கள் சன்மானம் கொடுப்பது உங்களுடைய கண்ணியத்தையும் விருப்பததையும் பொருத்தது" என்று மெது வாகவும் நயமாகவும் பேசினாா.
அந்த வாாத்தையைக் கேட்ட மதனகோபாலனது மனம குளிர்ந்தது; முகமும் மலரத் தொடங்கியது.
ஆனால், கல்யாணியம்மாள் திடுக்கிட்டு வியப்புற்று, "என்ன! என்ன! என்னுடைய பிளளையை நீரா காப்பாற்றினி! நீர் யாரோ வழியில் போகிற ஒரு செட்டியார். உமக்கும் என் மகனுக்கும்
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/230
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
