பக்கம்:மதன கல்யாணி-3.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 229 குறையாது. அவர்கள் செய்யும் காரியம் என் பிள்ளையின் நன்மையை நாடியது. உங்களைப் போன்றவர்கள் செய்வது வீண் கிருத்திரமம். அவ்வளவு தான் பேதம்" என்றாள். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் முன்னிலும் அதிக குதுகலமாகப் பேசத் தொடங்கி, "ஒகோ! அப்படியா ஒரே குற்றத்தை கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் செய்திருந்தால் அவருக்கு ஸ்தோத்திரம் அதிகரிக்கிறது; செட்டியார் செய்திருந்தால் அவரை அடித்து வெளியில் ஒட்டுகிறது. அப்படியானால், சன்மானமோ தண்டனையோ கிடைப்பது மனிதரைப் பொருத்ததாக இருக்கிறதே ஒழிய குற்றத்தைப் பற்றியதல்ல. ஆனால், இதில் இன்னொரு சந்தேகம். கிருஷ்ணா புரம் ஜெமீந்தாரும், இந்த செட்டியாரும் ஒரே மனிதராக இருந்துவிட்டால், அப்போது தண்டனை கிடைக்குமா? சன்மானம் கிடைக்குமா?" என்றார். அந்த வார்த்தையைக் கேட்ட கல்யாணியம்மாளது மனதில் அப்போதே ஒருவித சந்தேகமுண்டாயிற்று. ஆனாலும் விஷயம் இன்னதென்பது நிச்சயமாகத தெரியாமையால், சிறிது தடுமாறி மதனகோபாலனது முகத்தை நோக்க, அவன் "அம்மா! இவர்கள் தான் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார். செட்டியார் என்பது இவர்கள் ஒரு காரணத்தை முன்னிட்டு வைத்துக் கொண்ட பொய்ப் பெயர்" என்று பணிவாகக் கூறினான். அதைக் கேட்ட் கல்யாணியம்மாள் திடுக்கிட்டு இடியோசையைக் கேட்ட நாகமென நடுநடுங்கி அதிக விசையாக ஒடி கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் காலில் விழுந்து கும்பிட்டு அவரது பாதத்தைத் தொட்டு வணங்கி, "ஆ! என் வள்ளலே! என் தெய்வமே! எங்கள் குடும்பத்தை நிலைநிறுத்திய தாதாவே! நாங்களும் எங்களுடைய சந்ததியாரும் அல்லும் பகலும் அநவரதமும் தங்களை நினைத்து நினைத்து நன்றியறிதல் செலுத்தக் கடமைப்பட்டவர்களாகி விட்டோம். இந்த உலகங்களை எல்லாம் சேர்த்து எனக்கு உதவுவது போலவும், எமன் வாயில் நுழைந்த உயிரை மீட்டுக் கொடுப்பது போலவும், தாங்கள் என் மகனை எனக்குக் கொடுத்து, இருளடைந்து கிடந்த என் மனசுக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் இன்பச்சுடர் காட்டவல்ல கதிரவனான என் மகனை வளர்த்து