பக்கம்:மதன கல்யாணி-3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மதன கல்யாணி மகாராஜன் போலவும், மன்மதன் போலவும், மகாவிஷ்ணு போலவும் உருப்படுத்தி, எனக்களித்த எங்கள் குலதெய்வமாகிய தங்கள் விஷயத்தில் நான் சற்றுமுன் அபசாரமான வார்த்தைகளை உபயோகித்ததை எல்லாம் மறந்து, என்னை கூடிமித்தருள வேண்டும். என் குழந்தையை வளர்த்த விஷயத்தில் தாங்கள் ஏதோ சன்மானம் கேட்டீர்களே! தாங்கள் செய்த உதவிக்குச் சமமாக நான் கொடுப்பதற்கு இந்த உலகில் ஏதாவது பொருளிருக் கிறதா? என்னிடத்தில் உள்ள பொருட்களில் எல்லாம் அரிய பொருள் என்னுடைய உயிர்தான்; அதை எடுத்து இப்போதே தங்களுடைய காலடியில் வைத்துவிடட்டுமா? தங்களுக்கு விருப்ப மானால் சொல்லுங்கள். ஒரே நொடியில் கொடுத்து விடுகிறேன்" என்றாள். அதைக் கேட்ட கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் பூரித்துப் புளகாங்கித மடைந்து நகைத்து, "சரி, சரி, எழுந்திருங்கள்; எழுந்திருங்கள். நீங்கள் சற்றுமுன் சொன்னபடி என்னைத் தெய்வமாகவே ஆக்கி விட்டீர்களே! ஆனால், எங்கேயாவது கோவில்பட்டி என்னைக் கொண்டு போய் அதற்குள் வைத்து, "இங்கேயே உட்கார்ந்திரு' என்று மாத்திரம் சொல்லிவிட வேண்டாம். உங்களுடைய உயிரைக் காப்பாற்ற நாங்கள் எல்லோரும் எவ்வளவோ பாடு பட்டோமே! அப்படி இருக்க, அந்த அரிய உயிரை நான் வாங்கிக் கொண்டால், அப்புறம் மதனகோபாலன், "அம்மா" என்று யாரைக் கூப்பிடுவான். உங்களிடத்தில் என்ன சன்மானம் பெறலாம் என்று நானும் யோசிக்கிறேன். ஒன்றும் தோன்றவில்லை. ஆகா! இந்தச் சமயத்தில் எனக்கு மாத்திரம் இங்கே ஒர் ஆண்குழந்தை இருந்தால், நான் என்ன செய்வேன் என்றால், "அம்மணி நான் உங்களுடைய மூத்த பிள்ளையை உங்களுக்குத் திருப்பிக் கொடுத்தேனே. அதற்குச் சன்மானமாக உங்களுடைய மூத்த பெண்ணை என்னுடைய பிள்ளைக்குக் கட்டிக்கொடுங்கள்" என்று கேட்டிருப் பேன். இப்போது, எனக்குப் பிள்ளை இல்லை. இனி உண்டா னால், நான் கேட்டு வாங்கிக் கொள்ளுகிறேன்" என்று கூறி, சிவஞான முதலியாரைப் பார்த்துக் கண் சிமிட்டினார். அந்தப் பார்வை வக்கீலின் மனதில் சுருக்கென்று தைத்தது; அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/233&oldid=853375" இலிருந்து மீள்விக்கப்பட்டது