வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 231
தத்தளித்துத் தடுமாறுகிறார். அந்த ஜெமீந்தாரது வார்த்தையைக் கேட்ட கல்யாணியம்மாளினது முகம் உடனே மாறுபட்டு மேகம் சூழ்ந்தது போலாயிற்று. ஒடிப் போன தனது மூத்த குமாரியான துரைஸாணியைப் பற்றிய பிரஸ்தாபம் அதிகமாக வந்துவிடுமோ என்ற பயமும் கவலையும் உண்டாகிவிட்டன. உடனே அந்தச் சீமாட்டி வெட்கித் தலை குனிந்தாள்.
அதைக் கண்ட கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், "அம்மணி கவலைப் பட வேண்டாம். எனக்கு இப்போது பிள்ளையும் இல்லை குட்டியு மில்லை. இனி பிறக்கப் போவதுமில்லை, நீங்கள் என் பிள்ளைக்குப் பெண் கொடுப்பதை அப்புறம் பார்த்துக் கொள்வோம். மதன கோபாலன் பொருட்டும், உங்கள் பொருட்டும் கடவுள் செயலால் எல்லாம் சந்தோஷமாக முடிந்ததை உத்தேசித்தும், நான் நாளைய தினம் என்னுடைய புது பங்களாவில் ஒரு விருந்து நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் உங்களுடைய புத்திரன் புத்திரிகளை அழைத்துக் கொண்டு வந்திருந்து என்னைக் கெளரவப்படுத்தி அந்த விருந்தை நடைபெறச் செய்ய வேண்டும். அந்தச் சன்மானத் தைத் தான் நான் இப்போது கோருகிறேன். மறுக்காமல் நீங்கள் ஒப்புக் கொண்டால் அதனால் என் மனசில் ஏற்படும் பிரம்மாநந்தம் உண்டல்லவா, அதுதான் தாங்கள் எனக்குச் செய்யத்தகுந்த பெருத்த சன்மானம்" என்றார்.
அந்தச் சமயத்தில் மதனகோபாலன் அகற்கு இணங்கும்படி தனது தாயை இறைஞ்சிக் கேட்டுக் கொள்பவன் போல இரங்கிய முகமாகத் தனது தாயை நோக்க, கல்யாணியம்மாள் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரைப் பணிவாக நோக்கி, "இதுவரையில் தாங்கள் எப்படி மதனகோபாலனைப் பாதுகாத்து அவனுடைய நன்மைகளை உங்களுடைய பொறுப்பாகப் பார்த்து வந்தீர்களோ, அது போலவே இனியும் தாங்களே இருந்து இந்த சமஸ்தானத்தை அவன் ஆளும் விஷயத்தில் அவனுக்கு நல்ல புத்திமதிகள் சொல்லி எல்லாக் காரியங்களையும் நடத்தி வைக்கவேண்டும். நான் தங்களை என்னுடைய சொந்தத் தகப்பனார் போல மதிக்கிறேன். ஆகையால், தாங்கள் இனி எந்த விஷயத்திலும் எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கலாம்; அதை நாங்கள் உடனுக்குடன் நிறைவேற்றி விடுகிறோம்" என்றாள்.
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/234
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
