பக்கம்:மதன கல்யாணி-3.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 233 வருகிறேன். எனக்கு நீங்கள் மரியாதைகூடச் செய்ய வேண்டுமா?" என்றார். அதைக் கேட்ட ஜெமீந்தார், "சந்தோஷம்! முதலியாருக்கும் எனக்கும் இன்றைய நேற்றைய பழக்கமா! இதுவரையில் அவர் என் விஷயத்தில் செய்துள்ள உதவிகளுக்கு அளவு சங்கியை உண்டா! நான் பைத்தியம் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளைக் காப்பாற்ற இவர் எவ்வளவு பாடுபட்டிருக்கிறார் தெரியுமா? அதை எல்லாம் நான் மறந்தால், தவித்த வாய்க்குத் தண்ணிகூட எனக்கு அகப்படாது. அவரால் எனக்கு ஏற்பட்ட கணக்கில்லா நன்மைகளை எல்லாம் நான் இப்போது முகதாவில் புகழக்கூடாது. நிறை வயிறாக ஐந்தும் குளிர்ந்திருக்கும் சமயத்தில் இவரை வாயாரப் புகழ்ந்து மனதாரத் துதிக்க வேண்டும். சரி; பதினாறு வருஷகாலமாகப் பிரிந்த புத்திரனோடு தனியாகப் பேசி நீங்கள் ஆனந்தமடைவதை நான் இனியும் கெடுக்கக்கூடாது. இந்த விருந்து விஷயமான ஏற்பாடுகளைச் செய்ய நான் வேறே சில இடங்களுக்கும் அவசரமாகப் போக வேண்டும். எல்லோரும் தயவு செய்து உத்தரவு கொடுக்க வேண்டும்" என்று முதலியாரை யும், கல்யாணியம்மாளையும், மதனகோபாலனையும் பார்த்துக் கூறி விடைபெற்றுக் கொண்டு வெளியில் போய்விட்டார். ★ ★ ★ 34-வது அதிகாரம் பலநாளைய திருடன் மறுநாளைய பகல் பதினொரு மணி சமயமாயிற்று. மைலாப் பூரிலிருந்த மனோகர விலாசம் என்ற பங்களாவின் உட்புறத்தி லிருந்து ராஜபாட்டை வரையிலும், ராஜபாட்டையின் இருபுறங் களிலும் சுமார் கால்மயில் தூரம் வரையிலும் மோட்டார் வண்டிகளும், ஸாரட்டுகளும், கோச்சு வண்டிகளும், புரூஹம் வண்டிகளும், பெட்டி வண்டிகளும், குதிரை வண்டிகளும், ரிக்ஷா வண்டிகளுமே மயமாகக் காணப்பட்டன. அன்றைய தினம் மனோகர விலாசத்தில் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் தயாரித்திருந்த