பக்கம்:மதன கல்யாணி-3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மதன கல்யாணி விருந்தை உண்பதற்காக, அவர் ஆயிரக்கணக்கான சீமான்களையும் சீமாட்டிகளையும் அழைத்திருந்தார். சென்னப்பட்டணத்தில் உள்ள சகலமான வர்த்தகர்களும், ஜாகீர்தார்களும், பெருத்த பெருத்த உத்தியோகஸ்தர்களும் வந்து கூடித் தங்களது வாகனங்களையும் வண்டிகளையும் மேலே சொல்லப்பட்டபடி நெடுந்துரம் வரையில் இரட்டை வரிசையாக நிறுத்தியிருந்தனர். கல்யாணியம்மாளும் சிவஞான முதலியாரும் மதனகோபாலனும் கோமளவல்லியும் அவர்களது முக்கியமான பணிமக்களும் காலை பத்து மணிக்கே வந்து சேர்ந்து விட்டனர். மனோகர விலாசத்தில் இருந்த மோகனாங்கியைப் பார்த்து, அவளிடத்தில் பழக்கம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த கல்யாணியம்மாளை, மதனகோபாலன் மோகனாங்கி இருந்த விடுதிக்கு அழைத்துக் கொண்டு போக, கல்யாணியம்மாள் மோகனாங்கியிடத்தில் மிகுந்த அன்பும் பிரியமும் காட்டி, அவளையும் தனது இன்னொரு குமாரத்தி போல வைத்து நடத்துவதாகவும், அவளை விட்டு மதனகோபாலன் பிரிந்திருக்க முடியாதென்று சொல்வதனால், அவளும் தனது ஜாகைக்கே வந்துவிட வேண்டும் என்றும் கூறி, அவளை இன்ப சாகரத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள். அவர்கள் அப்படி இருக்க, தேனாம் பேட்டையில் உள்ள கிருஷ்ணாபுரம் பங்களாவில் இருந்த மீனாகூரி யம்மாள் கண்மணியம்மாள் முதலியோரும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரே பசவண்ண செட்டியாராக வந்தவர் என்பதையும், ஹைகோர்ட்டுத் தீர்மானத்தின் விவரங்களையும் கேள்வியுற்ற தன்றி, அன்றைய விருந்திற்கு வரவேண்டும் என்று ஜெமீந்தார் எழுதிய கடிதத்தையும் பெறவே, அவர்கள் இருவரும் மனோகர விலாசத்திற்கு வந்தனர். அந்த பங்கள ஒரு பெருத்த மகாராஜாவின் அரண்மனை போன் மகா பிரமாதமான மாளிகை ஆதலால், ஆயிரக்கணக்கில் வந்து கூடியிருந்த விருந்தினரான அத்தனை பெரிய மனிதர்களுக்கும் இருக்க மிகவும் வசதியான இடம் இருந்தது. சுமார் பதினாயிரம் மனிதர்கள் வரையில் உட்கார்ந்து விருந்துண்ணத்தக்க அவ்வளவு விசாலமான ஒர் ஆயிரக்கால் மண்டபத்தில் ஏராளமான தனிகர்கள் தலை வாழையிலை போட்டு அழகாக உட்கார்ந்து சம்பிரமமாக விருந்துண்டனர். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/237&oldid=853379" இலிருந்து மீள்விக்கப்பட்டது