பக்கம்:மதன கல்யாணி-3.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


236 மதன கல்யாணி வழங்கப்பட்டபின், மிகவும் கீர்த்தி வாய்ந்த வீணை வித்துவான் ஒருவரால் மாலை நான்கு மணி வரையில் மகா அருமையான சங்கீதக் கச்சேரியொன்று நடைபெற்றது; அங்கே கூடியிருந்த யாவரும் அந்த விருந்தின் சிறப்பைப் பற்றியும், சங்கீதக் கச்சேரியின் மேன்மையைப் பற்றியும், முதல் நாள் முடிவுற்ற வழக்கைப் பற்றியும் பலவாறாக ஒருவரோடொருவர் தணிவான குரலில் சம்பாஷித்து மிகுந்த குதூகலமும் ஆனந்தமும் அடைந்தனர். அவர்களது கண்கள் அடிக்கடி மதனகோபாலனது மன்மதாகார மான அற்புத ரூபத்தையும், அபூர்வமான அழகையும் பார்த்துப் பார்த்துத் தாமும் விருந்துண்டன. விருந்தினரில் பலர் மதன கோபாலன் தனது தாயைவிட்டுப் பதினாறு வருஷ காலம் வரையில் பிரிந்திருந்து கடைசியில் தெய்வாதுகூலத்தால் வந்து கூடியதைப் பற்றி மிகவும் உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தனர். வேறு சிலர் அந்த விருந்தையுண்டு அவ்வளவு நேரம் வரையில் அங்கிருந்தும், என்ன காரணத்தை முன்னிட்டு அந்த விருந்து நடைபெற்ற தென்பதை அறியாதவராக இருந்தனர். அப்படிப் பலவாறாக இன்புற்றிருந்த விருந்தினர் வீணைக் கச்சேரி முடிந்த பிறகு, ஒவ்வொருவராக எழுந்து கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரிடத்தில், தாம் பேசுவதற்கு அனுமதி கேட்கத் தொடங்கினர். அதைக் கண்ட ஜெமீந்தார் உடனே எழுந்து நின்று கைகுவித்து எல்லோரையும் வணங்கி, "என்னுடைய பிரியமான நண்பர்களே! சீமான்களே! இன்றைய காலை முதல் உங்கள் எல்லோரையும் நான் கடுங்காவல் தண்டனையில் வைத்து, மிகவும் துன்பப்படுத்தி விட்டேன். ஆகையால், நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போவதற்கு ஆவல் கொள்வது இயல்புதான். சர்வசாதாரண மனிதனாகிய என்னை நீங்கள் ஒரு பொருட்டாக மதித்து, என்னுடைய வேண்டுகோளுக் கிணங்கி, இங்கே வந்து விஜயம் செய்து, இவ்வளவு தூரம் என்னைப் பெருமைப்படுத்தியதைப் பற்றி நான் அடையும் சந்தோஷத்துக்கு வேறே எந்த சந்தோஷமும் நிகராகாதென்று சொல்வது வஞ்சகப் புகழ்ச்சியாகாது. ஆனால் ஒரு விஷயம், இங்கே இப்போது விஜயம் செய்துள்ள பிரபுக்களுள் பலருடைய அடையாளம் எனக்குத் தெரியவில்லை. என்னுடைய ஆப்த