பக்கம்:மதன கல்யாணி-3.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 237 நண்பரான ஒருவர் கொடுத்த ஜாப்தாவை வைத்துக் கொண்டு நான் எல்லோரையும் வரவழைத்தேன். எனக்கு எப்படி அவர்களுடைய அடையாளம் தெரியவில்லையோ, அதுபோல அவர்களுக்கும் நான் யார் என்பதும், என்னுடைய குடும்ப வரலாறும், இந்த விருந்து இன்றைய தினம் எதன் பொருட்டு நடத்தப்பட்ட தென்பதும் தெரிந்திராவென்றே நான் நினைக்கிறேன். ஆகையால் நண்பர்கள் எல்லோரும் இன்னம் இரண்டொரு நிமிஷம் இருந்து இந்த விஷயங்களைச் தெரிந்து கொள்ள வேண்டுமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். எனக்கு உயிர்த் தோழரும், பள்ளிக் கூடத்து நண்பரும், பரம உபகாரியுமான வக்கீல் சிவஞான முதலியார் என்னுடைய வரலாற்றைப் பற்றியும், இந்த விருந்து நடத்தப்பட வேண்டிய பிரமேயத்தையும், மிகவும் சுருக்கமாக இரண்டொரு வார்த்தையில் சொல்லுவார்; ஆகையால் பிரபுக்கள் எல்லோரும் தயைகூர்ந்து இரண்டொரு நிமிஷநேரம் அமர்ந்து கொள்ள வேண்டும்" என்று நயமாகக் கூறி உட்கார்ந்தார். உடனே சிவஞான முதலியார் மகிழ்ச்சியும், புன்னகையும், தற் பெருமையும் ஜ்வலித்த முகத்தினராக எழுந்து நின்று, "கனவான் களே! அருமையான நண்பர்களே! வாக்கு வன்மையோடு திறமையாகப் பேசி எல்லோரையும் சந்தோஷிக்கச் செய்யும் சக்திக்கும் எனக்கும் நிரம்பவும் தூரம். நான் ஸ்மால்காஸ் கச்சேரிகளில் பத்து ரூபாய், எட்டு ரூபாய் வீட்டு வாடகை பாக்கி வரவேண்டிய வழக்குகளில் வாதித்தறிவேனே அன்றி, இப்படிப் பட்ட பெருத்த கூட்டங்களில் நான் வாய் திறந்தும் அறியேன், என்னுடைய ஆப்த நண்பரான கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் என்னை இப்படித் திடீரென்று இழுத்து விடுவார் என்பது கொஞ்சமாவது எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஏதாவது எழுதி மனப்பாடம் செய்து கொண்டாவது வந்திருப்பேன். அதற்கும் சந்தர்ப்பமில்லாமல் போய்விட்டது. ஆனால், நான் இப்போது எடுத்துச் சொல்வதற்கும் அதிகமாக ஒன்றும் இல்லை. மாரமங் கலம் சமஸ்தானம் என்பது இந்த ராஜதானியில் உள்ள எல்லா சமஸ்தானங்களிலும் பெரிது; அது தஞ்சை ஜில்லாவில் உள்ளது; அதன் ஜெமீந்தாரை அந்த ஜில்லாவில் உள்ளோர் ஒரு மகாராஜன்