பக்கம்:மதன கல்யாணி-3.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 239 அழைத்து இந்த விருந்தை நடத்தி வைக்கிறார். ஆனால், இவர் விஷயத்தில் மாத்திரம் ஈசுவரன் பெருத்த சதிசெய்து விட்டான். இவருடைய சமஸ்தானமாகிய கிருஷ்ணாபுரம் என்பது மார மங்கலத்துக்குப் பக்கத்தில் உள்ளது. வருமானத்தில் அதற்கு அநேகமாய் சமமாகவே சொல்லலாம். இவரும் நானும் பள்ளிக் கூடத்துச் சிநேகிதர்கள். பாலியராக இருந்த போது இவர் மகா ரூபவதியான ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருந் தார். அந்தப் பெண்ணினிடத்தில் இவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் பிறந்திருந்தன. இவர் அவர்கள் மூவரையும் உயிருக்குயிராக மதித்திருந்தார். திடீரென்று இவருடைய சம்சாரம் இறந்து போகவே இவருக்குச் சித்தப்பிரமை உண்டாகி விட்டது. டாக்டர் வேறே ஏதாவது தேசத்துக்குப் போயிருக்கும்படி இவரை வற்புறுத்த, இவர் தம்முடைய குழந்தைகளை என் வசத்தில் ஒப்புவித்துவிட்டு மைசூருக்குப் போய்ச் சேர்ந்தார். கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்த ஊரில் உண்டான வாந்திபேதியால் அந்த இரண்டு குழந்தைகளும் ஒரே நாளில் இறந்து போய்விட்டன. அந்தச் சங்கதியைக் கேட்ட பின், இவர் இந்த ஊருக்கே வரக்கூடாதென்று மைசூரிலேயே இருந்து விட்டார். அந்தச் சமயத்திலே தான் பிடில்காரருடைய குழந்தைகளை இவர் வாங்கியது. இவருக்கு மைசூரில் பிரபலமான சந்தனக் கட்டை வியாபாரம் இருக்கிறது. அதோடு பெருத்த சமஸ்தானமும் இருக்கிறது; இதுவரையில் அங்கே இருந்தது போதும் என்று நினைத்து இங்கே வந்துவிட்டார். இந்த மாளிகை பெருத்த மகா ராஜனுடைய செல்வத்துக்குச் சமமாக இருக்கும் என்றே நாம் நினைக்க வேண்டும். ஆனால் இவ்வளவு பெருத்த செல்வத்தையும் அடைய இவர்களுடைய சொந்தக் குழந்தைகள் இல்லாமல் இறந்து போனது தான் அதிக துக்ககரமான விஷயம். இருந்தாலும் என்ன செய்கிறது? வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத் தார்க்கும் துய்த்தல் அரிது என்று திருவள்ளுவர் சொல்லிய படி, ஒருவனுக்கு எவ்வளவு அதிகமான சம்பத்திருந்தாலும், அவன் அவ்வளவு சுகந்தான் அனுபவிக்கலாம் என்று கடவுள் விதித்திருக் கிறாரோ எவ்வளவு தான் கிடைக்கும் என்ற வேதாந்தத்தை தான் இவர் ஆறுதலாகக் கொள்ள வேண்டும். நெடுங்காலமாக இவர் in.65.III–16