பக்கம்:மதன கல்யாணி-3.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 241 அந்தச் சமயத்தில் அருணகிரிப்பிள்ளை மேலும் பேசத்தொடங்கி, "இவ்வளவு அன்பாக நம்மை எல்லாம் வருவித்து மகா சிரேஷ்ட மான இத்தனை உபசாரங்களையும் நட்த்தி விருந்தளித்து நம்மை சந்தோஷப்படுத்திய ஜெமீந்தார் அவர்களுக்கு, நான் எனக்காகவும், இந்தக் கூட்டத்திலுள்ள எல்லோருக்காகவும், மிகுந்த வந்தனமும் நன்றியறிதலும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்; மாரமங்கலம் சமஸ்தானத்தின் உண்மையான மைனருக்கும் அவர்களது தாயாரான கல்யாணியம்மாள் அவர்களுக்கும் எத்தனையோ பெரிய இடர்கள் இதுவரையில் நேர்ந்திருந்தாலும், ஈசனருளால் அவைகள் எல்லாம் சூரியனுக்கு முன் இருள் போலப் பறந்து போயின. கடைசியில் அவர்கள் இப்போது பரம சந்தோஷம் அனுபவிக்கிறார்கள். அப்படி அனுபவிக்க அவர்களுக்கு உரிமையும் உண்டு. ஏனென்றால் வெயிலிலிருந்து வெதும்பிய வர்கள் நிழலுக்குப் போனால், அவர்களுக்கு அது பரமசுகமாக இருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்த ஜெமீந்தார் அவர்களுடைய விஷயம் மாத்திரம் இப்போதும் மிக மிகப் பரிதாபகரமாகவே இருக்கிறது. இவர்கள் இத்தனை வருஷ காலம் துயரத்தில் ஆழ்ந்திருந்தும், அது இப்போதும் நீங்காமலேயே இருந்து வருகிறது. மனிதர்கள் காணாமல் போயிருந்தால் என்றைக் காகிலும் திரும்பி வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுண்டு. இறந்து போனவர்கள் எப்படி வருவார்கள்? நானும் இவர்களைப் போல பெருத்த துக்கத்திற்கு ஆளாகி இருப்பவனாகையால் இவர் களுடைய துக்கம் எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாக உரைக்கிறது. சுமார் 15-வருஷ காலத்துக்கு முன் எனக்கும் இரண்டு குழந்தைகளிருந்து வாந்திபேதியால் ஒரே நாளில் இறந்து போய் விட்டார்கள். அந்த விசனம் எனக்கு இன்னமும் மாறவில்லை. என்னுடைய குழந்தைகள் இறந்த காலத்தில் நானும் நம்முடைய நண்பரான இந்த சிவஞான முதலியாரும் ஒரே வீட்டில் குடியிருந்து வந்தோம்; அப்போது அவருடைய வீட்டில் வளர்ந்த இந்த ஜெமீந்தாருடைய குழந்தைகள் இரண்டையும் நான் பார்த்திருக் கிறேன். இரண்டும் சுவர்ணப் பதுமைகள் போல இருந்தன. ஆனால், அந்தக் குழந்தைகள் இன்னமும் உயிரோடிருப்பதாக நான் இதுவரையில் எண்ணியிருந்தேன். அவைகள் இறந்து போய்