244 மதன கல்யாணி
கொணர்ந்து என்னிடத்தில் விட்டு ரகசியமாக வளர்க்கச் சொன்னார். அந்தக் குழந்தைகளின் தகப்பனார் யாரோ ஒரு ஜெமீந் தார் என்றும், அவர் பைத்தியங் கொண்டு மைசூரில் இருப்பதாக வும், அந்த ஜெமீந்தாருடைய பங்காளிகள் ஆள்களை விட்டுக் குழந்தைகளைத் திருடிக்கொண்டு போய்க் கொன்றுவிட நினைப்ப தால், எவருக்கும் தெரியாமல் ரகசியமாக அவர்களை வைத்து வளர்த்து வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நான் அந்தக் குழந்தைகளின் அற்புதமான அழகைக் கண்டு, அவைகளின் மேல் இரக்கங் கொண்டு அப்படியே வளர்த்தேன். அவர்களைப் போஷிப்பதற்குப் பிடித்த செலவை எல்லாம் வக்கீலே கொடுத்து வந்தார். சைதாப்பேட்டையில் உள்ள குண்டுராவ் என்ற ஓர் உபாத்தியாயரை அமர்த்தி, அவர் ஒவ்வொரு நாளும் வீட்டில் இரண்டாவது கட்டுக்குள் வந்து பாடம் கற்றுக் கொடுக்கும்படி செய்திருந்தோம். இப்போது சுமார் ஒன்றரை வருஷ காலம் இருக்கும். வக்கீல் முதலியார் வந்து, அந்தக் குழந்தைகளின் தகப்பனாரான ஜெமீந்தார் இறந்து போய்விட்டதாகவும், இனி மேல் அந்தக் குழந்தைகளுக்காக மாதாமாதம் பணம் கொடுக்க தமக்குச் செளகரியப்படவில்லை என்றும், அந்த ஜெமீந்தாருடைய சமஸ்தானம் எல்லாம் கடனுக்காகப் பராரியாகிவிட்ட தென்றும், தாம் அந்தக் குழந்தைகளைக் கொண்டு போய் வேலையில் அமர்த்தப் போவதாகவும் சொல்லி, அவர்களை அழைத்துக் கொண்டு போய்விட்டார். அதன் பிறகு அந்தக் குழந்தைகள் எங்கே போனார்கள் என்பது எனக்குத் தெரியாது; இன்று காலையில் இந்த ஜெமீந்தார் வந்து, தாமே அந்தக் குழந்தையின் தகப்பனார் என்று சொன்னதைக் கேட்டவுடனே, எனக்க நிரம்பவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த ஜெமீந்தார் இறந்து போய் விட்டதாக வக்கீல் முதலியார் சொன்னார் என்பதை இவர்களிடம் தெரிவிக்க எனக்கு அச்சமாகவும், லஜ்ஜையாகவும் இருந்தது. எல்லாவற்றிற்கும் இங்கே வந்தால், நிஜம் வெளியாகும் என்று வந்தேன்; இப்போது எல்லாம் வெட்ட வெளிச்சமாகி விட்டது" என்று கூறி உட்கார்ந்து கொண்டார்.
அந்த விவரங்களைக் கேட்ட அங்கிருந்தோர் யாவரும் மிகுந்த பிரமிப்பும், மனக்கொதிப்பும் அடைந்து சிவஞான முதலியாரைப்
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/247
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
