246 மதன கல்யாணி
சொல்லக் கேட்டிருக்கிறேன். சுமார் ஒன்றேகால் ஒன்றரை வருஷமாக, இவர் என்னை நிறுத்திவிட்டார். அப்புறம் நான் அந்தக் குழந்தைகளைப் பார்க்கவில்லை" என்று கூறி உட்கார்ந்தார். அப்போதும், சிவஞான முதலியார் குண்டுராவையும் தமது பகைவர் கோஷ்டியில் சேர்த்து, தாம் சொன்னதையே பிடிவாத மாகச் சொல்லி கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரை நோக்கி, "என்ன! ஜெமீந்தாரே! உம்முடைய பங்களாவில் விருந்து சாப்பிட வந்தவர்கள் என்னை இப்படி அக்கிரமமாக உபத்திரவிப்பதை நீரும் பார்த்துக் கொண்டிருக்கலாமா? என்னுடைய உயிருக்குயி ரான சிநேகிதரான உம்மிடத்தில் நான் தவறாக நடக்க மாட்டேன் என்பது உமக்குத் தெரியாதா? அந்தக் குழந்தைகளை நானே சுடுகாட்டுக்குக் கொண்டு போய்க் கொளத்தி இருக்கிறேன். நான் உம்முடைய விருந்தாளியல்லவா? என்னை இவர்கள் உபத்திர விக்காமல் என்னைக் காப்பது உம்முடைய பொறுப்பல்லவா? இவ்வளவு தூரம் கட்டுப்பாடாகப் பேசுகிற இவர்கள் எல்லோரும் அந்தக் குழந்தைகள் இருவரையும் கொண்டு வந்து காட்டுவார் களானால், நான் எப்படிப்பட்ட சிகூைடிக்கும் பாத்திரனாகிறேன்" என்றார்.
அதைக் கேட்ட கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் கலகலவென்று நகைத்து, "சேச்சே! இவர் என்னுடைய உயிருக்குயிரான நண்பர் அல்லவா, இவர் அப்படிச் செய்திருக்கவே மாட்டார். இவரை ஒருவரும் உடத்திரவிக்க வேண்டாம்" என்ற வண்ணம் அங்கே சற்று தூரத்தில் மூடப்பட்டிருந்த ஒரு கதவுப் பக்கம் நோக்க, அங்கே ஆயத்தமாக நின்று கொண்டிருந்த ஒரு வேலைக்காரன் படேரென்று அந்தக் கதவைத் திறந்து கொண்டு அப்பால் போய், அவ்விடத்தில் இருந்த இன்னொரு விடுதியின் கதவைத் திறக்க, அவ்விடத்தில் இருந்து ஒரு வாலிபப் புருஷனும், ஒரு யெளவனப் பெண்ணும் வெளியில் வந்து, ஜனங்கள் கூடியிருந்த மண்டபத்தில் நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட விருந்தினர் யாவரும் அவர்களது கட்டழகைக் கண்டு ஸ்தம்பித்து, "ஆகா கந்தருவக் குழந்தைகள் போல இருக்கிறார்களே! இவர்களா ஜெமீந்தாருடைய குழந்தைகள்!" என்று தங்களுக்குள் பேசிக் கொள்ள, அதே
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/249
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
