பக்கம்:மதன கல்யாணி-3.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21 மதிலாய் ஒன்றி நின்று மனிதர்கள் ஒன்றுகூடி, வயதான ஒரு கிழவியைச் சித்திரவதைச் செய்வதைப் பார்த்துக் கொண்டு பொறுத்திருக்க மாட்டாமல் அவனது மனம் துடிதுடித்தது. அந்த மதிலின் மீது ஏறலாம் என்றால், காலில் புண்ணிருந்தபடியாலும், சுவரில் எவ்விதமான இடுக்காவது பிளவாவது இல்லாமல் மழமழப்பாக இருந்ததாலும், அவனால் ஒன்றும் செய்யக் கூடாமல் போய்விட்டது. அதற்குள் உட்புறத்தில் கிழவி கீழே வீழ்ந்து விட்டாள்; அவளைக் கட்டி எடுத்து சமுத்திரத்தில் போட்டு விடுவதென்ற தீர்மானம் செய்யப்பட்டதும் அவனது செவியில் விழுந்தது; அந்த மதிலில் ஒரு வாசற்படியும் கதவுமிருந்தன. அந்தக் கதவு மூடி உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்தது. அவர்கள் கிழவியை எடுத்துக் கொண்டு அந்த வழியாகவே வருவார்கள் ஆகையால், தான் அப்போது அங்கே இருப்பது கூடாதென நினைத்தவனாய் மதனகோபாலன் சிறிது அப்பால் போய் மதிலின் முடக்கில் மறைந்து கொண்டான். அவன் நினைத்தது போலவே அடுத்த நிமிஷத்தில் மதிலின் வாசற்கதவு திறக்கப்பட்டது. மைனரும் பாலாம்பாளும் கைகால்கள் கட்டப்பட்டிருந்த கருப்பாயியைத் தூக்கிக் கொண்டு வந்து சமுத்திரத்தில் போட்டு விட்டு உள்ளே போய்க் கதவை மூடித் தாளிட்டுக் கொண்டனர். மதிலின் முடக்கில் மிகுந்த பதைபதைப்போடு மறைந்திருந்த மதன கோபாலன் தனது பலவீனமான நிலைமையையும் காலில் கட்டப்பட்டிருந்த காயத்தையும் பொருட்படுத்தாமல் தனது ஆவேசத்தில் தன்னை மறந்தவனாய் ஒரே ஒட்டமாக ஒடி மதிலினது வாசலிற்கருகில் வந்து, தண்ணிர்ப் பக்கம் பார்க்க, அதற்குள் பிரம்மாண்டமாக வந்து திரும்பிய இரண்டு மூன்று அலைகளால் இழுத்துக் கொண்டு போகப்பட்ட கிழவியின் உடம்பு நெடுந்துரத்திற்கப்பால் போயிருக்கக் கண்டான். காணவே, அது அதற்கு அப்பாலும் போய்விடாமல் அதைத் தடுத்து இழுத்துக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணங் கொண்டவனாய், அலைகளுக்குள் விரைவாகப் பாய்ந்து, கிழவியின் உடம்பு கிடந்த இடத்தை அணுகினான். அப்போது பெருத்த பெருத்த அலைகள் எழுந்து உருண்டு புரண்டு உக்கிரமாக ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன ஆகையால், கிழவியின் உடம்பு கிட்ட வருவதும் உருண்டு