பக்கம்:மதன கல்யாணி-3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 247 சமயத்தில், அருணகிரிப் பிள்ளை, அண்ணாமலை முதலியார், குண்டுராவ் ஆகிய மூவரும் சடக்கென்று எழுந்த நின்று, "இவர்கள் தான் அந்தக் குழந்தைகள்" என்றனர். அவர்கள் சொல்லி வாய் மூடுவதற்குள், அங்கே கூடியிருந்த சில முரட்டாள்கள் சடேரென்று சிவஞான முதலியார் மீது பாய்ந்து அவரைப் பிடித்துக் கொண்டனர். ஒருவன் அவரது குடுமியைப் பிடித்து, "அடேய்! கழுதையின் மகனே! அந்தக் குழந்தைகளைக் கொண்டு போய் சுடுகாட்டில் கொளுத்தியவன் நீயல்லவா உயிரோடிருப்பவரைக் கொளுத்திய தாகச் சொன்ன உன்னை இப்போது நாங்கள் உண்மையிலேயே உயிரோடு கொளுத்தி விடுகிறோம்" என்று கூறி அவரது குடுமியைப் பிடித்தபடி அவரது தலையை நாலைந்து முறை குலுக்க, அவரது குடுமி கையோடு வந்துவிட்டது. அதே சமயத்தில் சப்தமேகங்களும், இடி மின்னல் காற்றுகளோடு வருவழிப்பது போல அடிகளும், உதைகளும், குத்துகளும், எச்சில் தம்பலங்களும் அவர் மீது சரமாரியாகப் பொய்கின்றன; அவர், "ஐயோ! அப்பா! அடிக்கிறார் களே! கொல்லுகிறார்களே என்று கூக்குரலிட்டுத் துள்ளிக் குதித்துக் கதறியழுகிறார். மற்ற ஜனங்கள் யாவரும், அடிப்போரை விலக்க முயலுகிறார்கள். அந்தச் சமயத்தில் கிருஷ்ணாபுரம் ஜெமீந் தாரே அந்தக் கும்பலில் விழுந்து எல்லோரையும் நயந்து மோவாயைப் பிடித்துக் கெஞ்சி மன்றாடி சிவஞான முதலியாரை மாத்திரம் தனியாக விலக்கி அழைத்துக் கொண்டு சற்று துரத்தில் போக, சிவஞான முதலியாரது உடம்பெல்லாம் இரத்த வெள்ளமாக ஒடுகிறது. அவர் மீதிருந்த பட்டுச்சட்டை, ஜரிகை வஸ்திரங்கள் முதலிய யாவும் நார்நாராகத் கிழிந்து தேர்ச்சிலைகள் போலத் தொங்குகின்றன. அந்த நிலைமையில், அவர், "ஐயோ அப்பா" என்று ஒலமிட்டழுத வண்ணம் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது காலில் விழுந்து அவரது பாதங்களைப் பிடித்துக் கொண்டு, "ஐயா! நான் உம்முடைய விஷயத்தில் பெருத்த நம்பிக்கைத் துரோகமும் மகா கொடிய பாதகமும் செய்துவிட்டேன். நீர் அதற்காக என்னைக் கொன்றாலும் அது பாவமாகாது. நீர் என்னை எப்படி நடத்தினாலும் எனக்குச் சம்மதிதான்" என்று கூறிக் கண்ணி சொரிந்து கோவெனக் கதறியழ, அதைக்கண்ட ஜெமீந்தார், "ஐயா! சிவஞான முதலியாரே! உம்மை நான் உயிருக்குயிராக மதித்துப் பூரணமான நம்பிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/250&oldid=853394" இலிருந்து மீள்விக்கப்பட்டது