பக்கம்:மதன கல்யாணி-3.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 249 நடக்கும் போது, எங்களுடைய தகப்பனார் யார் என்பதைக் காட்டுவதாக நீங்களும், பெரியவரும் சொன்னிர்கள். இப்போது எங்களையும் வெளியில் அழைத்துவரச் சொன்னிகள். நாங்கள் வந்தவுடனே சிவஞான முதலியாரை உடத்திரவப் படுத்தினார்கள். உடனே எல்லோரும் வெளியில் போய்விட்டார்களே. எங்களுடைய தகப்பனார் யார் என்பதைச் சொல்லவில்லையே! எங்களுடைய தகப்பனாரைப் பார்க்க வேண்டும் என்றும், அவருடைய இருப்பிடத்துக்குப் போக வேண்டும் என்றும், எங்களுடைய மனம் பதறுகிறது. அவர் இந்த விருந்துக்கு வரவே இல்லையா அல்லது வந்து தான் போய்விட்டாரா?" என்று மிகுந்த ஆவலோடும் பதைப்போடும் கேட்க, உடனே மதனகோபாலன் மிகுந்த மகிழ்ச்சியோடு புன்னகை செய்து, "அம்மா! நீங்கள் இரண்டு மூன்று நாட்களாக உங்களுடைய தகப்பனாரை எத்தனையோ தடவை பார்த்து விட்டீர்கள்! நீங்கள் இப்போதும் அவர்களுடைய பங்களாவிலேதான் இருக்கிறீர்கள். இப்போது நடந்த விருந்தெல்லாம் உங்கள் பொருட்டாகச் செய்யப்பட்ட உங்களுடைய சொந்த விருத்து; நீயும் உன்னுடைய தம்பியான மோகனரங்கனுந்தான் இந்த அரண்மனையின் எஜமானர்கள். உங்கள் இருவரையும் இத்தனை வருஷம் மறைத்து வைத்திருந்த தற்காகத்தான் இப்போது சிவஞான முதலியாருக்கு மரியாதை கிடைத்தது" என்றான். அந்த வரலாற்றைக் கேட்ட ராஜாயியும், மோகனரங்கனும் கரை கடந்த வியப்பும், திகைப்பும், கட்டிலடங்கர்த ஆனந்தமும், ஆவேசமும் அடைந்து, "ஆ என்ன என்ன! நாங்கள் கிருஷ்ணா புரம் ஜெமீந்தாருடைய பிள்ளைகளா?" என்று மிகுந்த ஆவலோடு கேட்க, அந்தச் சமயத்தில் விருந்தினரை எல்லாம் அனுப்பிவிட்டு அளவிறந்த பதைப்போடும் ஆவேசத்தோடும் உள்ளே வந்த ஜெமீந்தார், கடைசியாக ராஜாயி சொன்னதற்கு மறுமொழியாக, "ஆம்! நான் தான் உங்களைப் பெற்ற தகப்பன் என் செல்வக் குழந்தைகளா! எத்தனை வருஷ காலத்துக்கு முன் உங்களை விட்டுப் பிரிந்தேன்? ஆகா! சண்டாளன்! படுபாவி! உங்களை என்னென்ன கோலத்துக்கு ஆளாக்கினான்! அப்பா மோகனரங்கம்!