பக்கம்:மதன கல்யாணி-3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 251 தங்களுடைய விஷயத்தில் பரிஷ்காரமாகத் தெரிந்து விட்டது. அதுவும் தவிர, இதில் இன்னொரு விசேஷத்தைத் தாங்கள் கவனித்தீர்களா? என்னுடைய பிள்ளை எப்படித் தங்களி டத்தில் வந்திருந்தானோ அதுபோலத் தங்களுடைய பிள்ளையும் எங்களிடத்தில் கொஞ்ச காலமாகிலும் இருக்க நேர்ந்ததைக் கவனித் தீர்களா? எல்லாம்வல்ல சர்வேசுவரனே தோன்றத் துணைவனாக இருந்து நம்முடைய காரியங்களை எல்லாம் நடத்தி இருக்கிறான் என்பது நன்றாகத் தெரிகிறதல்லவா?" என்றாள். அதைக் கேட்ட கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், "ஆம் அம்மணி அதற்குச் சந்தேகமென்ன! எல்லாம் கடவுள் செயல்தான். அவனின்றி ஓர் அணுவும் அசையாதென்பது பொய்யாகுமா; ஆனால், இதில் இன்னொரு விஷயம்; தங்களுடைய புத்திரன் என்னிடத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கும், என்னுடைய புத்திரன் தங்களிடத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கும் எவ்வளவு வித்தியாச மிருக்கிறது பார்த்தீர்களா! சகலமான நற்குணங்களும் ஆண்மைத் தனமும் உருவெடுத்து வந்தது போலவும், பூநீராமச்சந்திரனே மறுபடி ஜனித்தது போலவும் தங்களுடைய செல்வக் குமாரன் வந்து பிறந்திருக்கிறான். என்னுடைய மகனோ, அடக்கி ஆளுவதற்குப் பெரியோர் இல்லாமையால் பல வழிகளில் சீர் குலைந்து கெட்டுப் போயிருக்கிறான். அப்படி இருந்தும், நான் அவனை மகன் என்று தான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் இனியாவது மதனகோபாலனுடைய பழக்க வாசனை யினால் நல்வழிப்பட்டு ஒழுங்கான மனிதன் ஆவான் என்று நான் நம்புகிறேன். அவன் உங்கள் விஷயத்தில் ஒரு பெருத்த தவறு செய்திருக்கிறான். அது இன்னதென்பதை நான் இப்போது வெளியிட இஷ்டமில்லை. நேற்றைய தினம் நான் உங்களிடத்தில் சன்மானம் கேட்ட போது இந்த விஷயத்தை மனசில் வைத்துக் கொண்டு தான் பேசினேன். அந்த விஷயத்தில் உங்களுடைய மனம் நிரம்பவும் புண்பட்டிருக்கிற தென்பதை நான் அறிவேன். என் முகதாகூடிண்யத்தைக் கருதி நீங்கள் அதை இனி பாராட்டாமல், என்னுடைய பையனை கூடிமித்துக் கொள்ள வேண்டும். அந்த விஷயத்தில் நான் உங்களைக் கெஞ்சி மன்றாடி ஆயிரம் தரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/254&oldid=853398" இலிருந்து மீள்விக்கப்பட்டது