பக்கம்:மதன கல்யாணி-3.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


252 மதன கல்யாணி கேட்டுக் கொள்ளுகிறேன். மதனகோபாலனும் அந்த விஷயத்தில் மோகனரங்கன் மேல் எவ்விதப் பகைமையும் பாராட்ட மாட்டான் என்று உறுதியாக நம்புகிறேன். அடேய் மோகனரங்கம்! வா இப்படி அம்மாள் காலிலும், மதனகோபாலன் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்" என்று மிகவும் உருக்கமாகப் பேசினார். உடனே மோகனரங்கன் நிரம்பவும் கிலேசமடைந்தவனாய், முன்னால் வந்து கல்யாணியம்மாளது காலில் விழுந்து, "அம்மணி மூடத்தனத்தினால் நான் தங்களிடத்தில் தவறுதலான காரியத்தைச் செய்து விட்டேன். என்மேல் வருத்தம் வைக்கக்கூடாது" என்று மிகவும் மனநைந்து கூற, அவனது கண்களில் கண்ணிர் பொங்கி மளமளவென உதிர்ந்தது. அதைக் கண்ட கல்யாணியம்மாள் மதனகோபாலன் முதலிய எல்லோரது மனமும் கண்களும் கலங்கின. கல்யாணியம்மாள் மிகுந்த அன்பும் மனநெகிழ்வும் அடைந்து, "அப்பா மோகனரங்கம்! போதும் எழுந்திரு நீ உண்மையில் தங்கமான குணமுடையவன் தான். அந்தத் தவறைச் செய்ய முதலில் தொடங்கியவன் நீயல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தவறில் உன்னை இறக்கியது வேறே மனிதர் ஆகையால் இதில் உன் பேரில் பிசகில்லை. எழுந்திரு ராஜா" என்று மிகவும் பரியமாகவும் பரிவாகவும் பேசி, அவனது கையைப் பிடித்துத் துக்கிவிட்டாள்; உடனே மோகனரங்கன் மதனகோபாலனைக் கட்டியணைத்து, "நான் இதுவரையில் பெரியவருடைய எந்த வார்த்தைக்கும் மாறாக நடந்தவனல்ல. ஆனால், இந்த விஷயத்தில் மாத்திரம், நான் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக நடக்கிறதைப் பற்றி அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். மோகனரங்கன் என்னைவிடப் பெரியவன்; அவன் என்னுடைய காலில் விழ, அப்படிப்பட்ட பிரமாதமான எந்தக் காரியத்தைச் செய்துவிட்டான். அவனுக்கு நாம் செய்து வைக்கக் கடமைப்பட்டுள்ள ஒரு காரியத்தைத் தானே அவன் செய்து கொண்டான். அதைப்பற்றி நாம் சந்தோஷப்படுவதைத் தவிர வேறுவிதமாக எண்ணுவதற்கில்லையே" என்று கூறி மோகன ரங்கனை இன்னொரு முறை கட்டித் தழுவினான். அதைக் கண்ட