பக்கம்:மதன கல்யாணி-3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மதன கல்யாணி ஒரு நாழிகை போல மாறி எல்லோரிடத்திலும் தமாஷாகப் பேசிச் சிரித்து விளையாடிய வண்ணம் தமது பிரத்தியேக விடுதியில் இருக்க, அந்தச் சமயத்தில் தபால்காரன் வந்து ஒரு கடிதத்தை அவரிடத்தில் கொடுத்துவிட்டுச் சென்றான். அது எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறதென்பதை அறியும் பொருட்டு அவர் அதன் முத்திரையை நோக்க, தனுஷ்கோடி என்ற முத்திரை அதில் காணப் பட்டது; அந்த ஊரிலிருந்து தனக்குக் கடிதம் எழுதக் கூடியவர் யார் என்பதைப் பற்றி அவர் சிறிது நேரம் யோசிக்க ஒன்றும் தோன்றவில்லை. உடனே அவர் அந்தக் கடிதத்தைப் பிரித்து படிக்க, அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: மகா-ா-ா-புரீ, பெரிய அப்பா அவர்கள் பொற்பாத கமலங்களில் அடியேன் துரைராஜா அநந்தகோடி தண்டனிட்டு வணக்கமாக எழுதும் சேதி. நேற்றைய தினம் ஹைகோர்ட்டில் விசாரணை நடந்த காலத்திலே தான், தாங்கள் இன்னார் என்பதை நான் அறிந்து கொண்டேன். அதற்கு முன் ஒருநாள் நாம் இருவரும் நம்முடைய பங்களாவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த விஷயங்களைக் கருதி, நான் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்து விடலாமா என்ற எண்ணம் என் மனசில் உண்டாயிற்று. ஆனால் அப்படிச் செய்யத் துணிவு உண்டாகவில்லை. இனி நான் பட்டணத்திலிருந்து உங்களுடைய முகத்தில் விழிப்பதற்கு யோக்கியதையற்றவன் ஆகி விட்டேன்; ஆகையால் இந்தத் தேசத்தையே விட்டு, எங்கே யாவது கொளும்பு கண்டி முதலிய துரதேசங்களுக்குப் போய், கொஞ்ச காலமிருந்து என்னுடைய மனசைத் திடப்படுத்திக் கொண்டு எப்படியாவது உயிரை விட்டு விடுவதையே உறுதியாக வைத்துக் கொண்டு இங்கே வந்துவிட்டேன். நீங்கள் என்னைத் தேடாமல் இருக்க வேண்டும் என்று நான் என்னுடைய விலாசத்தை இந்தக் கடிதத்தில் எழுதவில்லை. நான் இதுவரையில் கெட்டலைந்து அநியாயமாக அழிந்து போய் விட்டதைப் பற்றி என் மனம் மிகவும் பரிதவிக்கிறது. இனி நான் தங்களோடு கூட இருந்தால் நல்ல வழிக்கு வந்திடுவேன் என எனக்குத் தோன்றினாலும், நான் தங்களுடைய முகத்தில் விழிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/259&oldid=853403" இலிருந்து மீள்விக்கப்பட்டது